உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 14, 2010

பண்ருட்டியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்


பண்ருட்டி: 

                பண்ருட்டி நகரில் போக்குவரத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
 
                 பண்ருட்டி நகரம் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, கடலூர் - சித்தூர் சாலையின் இணைப்பு சந்திப்பாக உள்ளது. வியாபார தலமாக இருப்பதால் மக்கள், வாகன பெருக்கம் காரணமாக காந்திரோடு, கடலூர் சாலை, ராஜாஜி சாலை, சென்னை சாலை, கும்பகோணம் சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும்.

                        இதனால் பண்ருட்டியில் போக்குவரத்து சீரமைக்க தனிக்காவல் நிலையம் உருவாக்க வேண்டும் என்ற பொதுமக்கள் மற் றும் பொது நல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தனி போலீஸ் ஸ்டேஷன் துவங்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து போலீஸ் நிலையம் துவக்கிய பின் ஒரு வழிச்சாலைகளான காந்திரோடு, ராஜாஜி சாலை, இந்திராகாந்தி சாலை ஆகியவை இருவழிச்சாலைகளாக செயல்படுகிறது. பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் முதல், கார், வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வந்து செல்கின்றன. நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளது. வாகன ஓட்டிகளும் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. கடமைக்காக கடந்த மாதம் ஆட்டோ ஓட்டுனர்களுடன் கலந் தாய்வுக் கூட்டம் நடத்தி சென்னை, ராஜாஜி சாலையில் இரண்டு ஆட்டோக் கள் ஓட்டுவதற்கு மட்டும் அனுமதி என அறிவித் தனர்.

                          அதன் பின்பும் ராஜாஜி சாலை, சென்னை சாலையில் 20க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கிறது. மார்க்கெட் முன் சரக்கு லாரிகள், சரக்குகளை ஏற்றி இறக்குகின்றன. கடலூர் சாலை, காந்தி ரோடு, சென்னை சாலையில் வழிநெடுகி லும் கடைகள், தரை கடை ஆக் கிரமிப்பு கூடுதலாக அதிகரித்துள்ளது. காந்திரோடு தட்டாஞ் சாவடியில் துவங்கி நான்கு முனை சந்திப்பை வாகனத்தில் கடக்க குறைந்தது 15 நிமிடங்கள் ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். போக்குவரத்து தனிபோலீஸ் நிலையம் அமைத்தும் போக்குவரத்து சீரமையாதது வேதனையடைய செய்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior