பண்ருட்டி :
பண்ருட்டி போலீஸ் லைன் டி.எஸ்.பி., அலுவலகம் செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பண்ருட்டி போலீஸ் லைன் 4வது தெரு வழியாக அனைத்து மகளிர் காவல் நிலையம், மதுவிலக்கு பிரிவு, போலீசார் குடியிருப்பு, டி.எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்டவைகள் உள்ளன. இங்கு கடந்த 15 நாட்களுக்கு முன் இன்ஸ்பெக்டர் குடியிருப்பில் இருந்து கடலூர் சாலை வரையில் கால்வாய்களை சீரமைக்க பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி கான்கிரீட்டால் ஆன கால்வாயாக மாற்றி வருகின்றனர். இந்தப்பணி நடைபெறுவதற்காக கடந்த 10 நாட்களாக இன்ஸ்பெக்டர் குடியிருப்பு அருகில் அடைக்கப்பட்டது. இதனால் தினமும் வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் தூர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக