உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கண்டரக்கோட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்டரக்கோட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், டிசம்பர் 29, 2010

பண்ருட்டி தென்பெண்ணையாற்றில் மணல் கொள்ளை: பாலத்திற்கு ஆபத்து





கடலூர்:

               கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த, தென்பெண்ணையாற்றின் புதிய மற்றும் பழைய பாலம் அருகில், தினமும், 200 மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுப்பதால், மண் அரிப்பு ஏற்பட்டு, பாலத்திற்கு ஆபத்து உருவாகும் நிலை உள்ளது.

               சமீபத்தில் பெய்த கன மழையால், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, தமிழகத்தில் பெரும்பாலான மணல் குவாரிகள் முடப்பட்டன. இதனால், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது தண்ணீர் வடிந்து வரும் நிலையில், பண்ருட்டி அடுத்த தென்பெண்ணையாறு, கெடிலம், மலட்டாறு பகுதியில், டிப்பர் லாரிகள் மூலம் மணல் கடத்தல் நடந்து வருகிறது. அரசியல் தலையீடு காரணமாக, வருவாய்த் துறையினர் கண்டுகொள்வதில்லை. 

            லாரிகளை பிடித்து விŒõரிப்பது, உயரதிகாரிகளுக்கு தெரிந்தால், வழக்கு பதிவு செய்வது, இல்லையெனில், "மாமூல்' பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் போலீசார் விட்டு விடுகின்றனர். இந்நிலையில், தொடர் மணல் தட்டுபாடு காரணமாக, மாட்டு வண்டிக்கு ஏக கிராக்கி ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை தென்பெண்ணையாறு புதிய மற்றும் பழைய பாலம் அருகில், தினமும் 200 மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளப்படுகிறது. இதனால் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

Read more »

புதன், ஆகஸ்ட் 04, 2010

பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையில் மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்

பண்ருட்டி: 

               பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையில் மணல் திருட்டைத் தடுக்க பொதுப்பணித் துறையினர் பாதையில் பள்ளம் தோண்டி தடுப்பு ஏற்படுத்தினர்.

              பண்ருட்டி அடுத்த அக்கடவல்லி, கண்டரக்கோட்டை, புலவனூர், மேல்குமாரமங்கலம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள தென் பெண்ணை ஆற்றில் தினமும் இரவு நேரங்களில் லாரிகளில் திருட்டு மணல் ஏற்றிச் செல்லும் சம்பவம் அதிகரித்துள்ளது. பண்ருட்டி தாசில்தாராக பாபு இருந்த போது தினமும் இரவு வருவாய்த் துறையினர் ரோந்து சென்று மணல் கடத்தலைத் தடுத்தனர்.இதனால் ஆத்திரமடைந்த மணல் கொள்ளையர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஒ., மீது லாரி ஏற்றிக் கொல்ல முயன்றனர். 

              இதனையடுத்து வருவாய்த் துறையினர் மணல் கடத்தலைத் தடுப்பதற்கு அஞ்சுகின்றனர்.இதனால் தினமும் டிப்பர் லாரிகள் மூலம் மணல் கடத்தல் சம்பவம் அதிகளவில் அரங்கேறி வருகிறது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் மணல் கடத்தலை தடுத்து நிறுத்த வருவாய்த்துறை, போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று தாசில்தார் பன்னீர்செல்வம், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் குமார், வருவாய் ஆய்வாளர் பூபாலன் ஆகியோர் கண்டரக்கோட்டை, புலவனூர் பகுதியில் மணல் கொண்டு செல்லும் பாதையில் பள்ளம் தோண்டி தடுப்பு ஏற்படுத்தினர்.

Read more »

செவ்வாய், ஜூன் 08, 2010

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

பண்ருட்டி : 

                கண்டரக்கோட்டை தென் பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை சப் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது கண்டரக்கோட்டை தென் பெண்ணையாற்றில் திருட்டு மணல் ஏற்றி வந்த டி.என்.45 ஏ.1499 எண்ணுள்ள லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அரசு அனுமதியின்றி டிப்பர் லாரியில் திருட்டு மணல் கடத்தியது தெரியவந் தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்து கண்டரக்கோட்டையைச் சேர்ந்த டிரைவர் பாண்டியனை (20) புதுப்பேட்டை போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக் குப் பதிந்து பாண்டியனை கைது செய்தனர்.

Read more »

வெள்ளி, ஏப்ரல் 30, 2010

பண்ருட்டி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற ஆர்.ஐ., விஏஓவை கொல்ல முயற்சி

 பண்ருட்டி:

                   பண்ருட்டி அருகே மணல் கடத்திய லாரிகளைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரைக் கொல்ல முயற்சி நடந்துள்ளது.பண்ருட்டி அருகே கன்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தல் நடப்பதாகத் தகவல் வந்ததையடுத்து, இன்று அதிகாலை 3 மணிக்கு வட்டாட்சியர் ஆர்.பாபு, வருவாய் ஆய்வாளர் பூபால சந்திரன், கிராம நிர்வாக அதிகாரி ஜோதிமணி உள்ளிட்டோர் அங்கு சென்றனர். அப்போது மணல் கடத்தி வந்த ஒரு லாரியை விஏஓ ஜோதிமணி தடுக்க முயன்றபோது, அவர் மீது ஏற்றுவது போல் வந்த லாரி, வேகமாகத் தப்பிச் சென்றது.பின்னால் வந்த மற்றொரு லாரியை வருவாய் ஆய்வாளர் பூபால சந்திரன் உள்ளிட்டோர் மடக்கினர்.  அந்த லாரியில் பூபால சந்திரனை ஏற்றி லாரியை காவல்நிலையத்துக்குக் கொண்டு செல்லும்படி  ஓட்டுனரிடம் வட்டாட்சியர் கூறியுள்ளார். லாரி எல்.என்.புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு கார் அந்த லாரியை மடக்க முயன்றிருக்கிறது. பின்னர் ரயில்வே கேட் அருகே லாரியை மடக்கிய காரில் இருந்து இறங்கிய ஓட்டுனர், லாரியின் ஓட்டுனரைக் கீழே தள்ளிவிட்டு பூபால சந்திரனுடன் லாரியைக் கடத்திச் சென்றிருக்கிறார். கும்பகோணம் சாலையிலுள்ள அரசு மருத்துவமனை அருகே லாரி சென்றபோது, பூபால சந்திரனைக் கீழே தள்ளிவிட்டு அந்த மர்மநபர் தப்பிச் சென்றுவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. லாரியில் செல்லும்போது அந்த மர்ம நபர் பூபால சந்திரனைக் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்திருப்பதாகவும் தெரிகிறது.இதையடுத்து, மர்மநபர் விட்டுச் சென்ற காரைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சனி, மார்ச் 06, 2010

துணை முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டரக்கோட்டையில் வரவேற்பு

பண்ருட்டி : 

                   துணை முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டரக் கோட்டையில் மாவட்ட தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டத்தில் இன்று நடைபெறும்  அரசு விழாக்களில் பங்கேற்க துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு சென்னையிலிருந்து கார் மூலம் நெய்வேலி வந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான கண்டரக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பன்னீர்செல்வம், சேர்மன்கள் கடலூர் தங்கராசு, பண்ருட்டி பச்சையப்பன், முன்னாள் எம்.பி., கணேசன், மாவட்ட துணைச் செயலாளர் பழனிசாமி,  நகர செயலாளர்கள் பண்ருட்டி  ராஜேந்திரன், நெய்வேலி புகழேந்தி, கடலூர் முன்னாள் சேர்மன் ராஜேந்தின், அண்ணா கிராம ஒன் றிய செயலாளர் வெங்கட் ராமன் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior