பண்ருட்டி :
துணை முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டரக் கோட்டையில் மாவட்ட தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டத்தில் இன்று நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்க துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு சென்னையிலிருந்து கார் மூலம் நெய்வேலி வந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான கண்டரக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பன்னீர்செல்வம், சேர்மன்கள் கடலூர் தங்கராசு, பண்ருட்டி பச்சையப்பன், முன்னாள் எம்.பி., கணேசன், மாவட்ட துணைச் செயலாளர் பழனிசாமி, நகர செயலாளர்கள் பண்ருட்டி ராஜேந்திரன், நெய்வேலி புகழேந்தி, கடலூர் முன்னாள் சேர்மன் ராஜேந்தின், அண்ணா கிராம ஒன் றிய செயலாளர் வெங்கட் ராமன் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக