உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சுற்றுலாத்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுற்றுலாத்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

கடலூர் மாவட்டத்தில் தனியார் பங்களிப்புடன் சுற்றுலாப் பயணிகள் வருகையை ஊக்குவிக்க புதிய திட்டம்


கடலூர்:
 
                 சுற்றுலாப் பயணிகள் வருகையை ஊக்குவிக்கும் வகையில், தனியார் வீடுகளில் சுற்றுலாப் பயணிகளைத் தங்க வைக்கவும், அவர்களுக்கு நமது கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையில் உணவு வகைகளை அளிக்கவும் வகை செய்யும் திட்டம், கடலூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி அறிவித்து உள்ளார். 

இது குறித்து ஆட்சியர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

               தமிழக முதல்வரின் அறிவுரைப்படி சுற்றுலாத் துறையினரால், தமிழகத்தில் தனியார் பங்களிப்புடன், உணவுடன் கூடிய உறைவிடத் திட்டத்தை விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதல் இடத்திலும், உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகையில், மூன்றாம் இடத்திலும் உள்ளது. பொழுதுபோக்கு, மருத்துவம், கல்வி போன்ற பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் வந்து தங்கும், வெளிமாநிலப் பயணிகள் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்து உள்ளது. 

             நடுத்தர சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட வசதிகள் தற்போது போதுமானதாக இல்லை. எனவே கடலூர் மாவட்டத்துக்கு வருகை தரும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக, உணவுடன் கூடிய உறைவிடம் அளிக்கும் திட்டம், சுற்றுலாத் துறை மூலம் விரிவு படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் தனியார் தங்கள் வீடுகளில் உள்ள அறைகளை சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு அளிக்கலாம். அவ்வாறு தங்கள் வீடுகளில் சுற்றுலாப் பயணிகளை, உணவுடன் தங்க வைக்க விரும்புவோர் தங்கள் பெயர்களை, சுற்றுலாத் துறையில் பதிவுசெய்து கொள்ள வேண்டும். உணவுடன் கூடிய உறைவிடத் திட்டம் பற்றிய கையேடுகளில், விவரங்கள் அளிக்கப்படும். 

இத்திட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை தங்கள் வீடுகளில் தங்க வைக்க விருப்பம் உள்ளவர்கள், 

சுற்றுலா அலுவலர், 
ரயில்வே ஃபீடர் சாலை, 
சிதம்பரம் (தொலைபேசி எண் 04144- 238739, செல்ஃபோன் 9789055400 ) 

என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.




Read more »

புதன், ஏப்ரல் 27, 2011

குறைந்த கட்டணத்தில்ஐ.ஆர்சி.டி.சி. சார்பில் கோடைச் சுற்றுலா


               இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்சி.டி.சி.) சார்பில் ஆண்டு தோறும் கோடை காலங்களில் கோடை வாசஸ் தலங்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது.

             ஏழை, நடுத்தர மக்கள் சுற்றுலா செல்ல வசதியாக குறைந்த கட்டணத்தில் ரெயில் டிக்கெட், சுற்றுலா தலங்களுக்கு செல்ல வாகன வசதி, தங்கும் இடம் போன்றவற்றை உறுதி செய்து முன்கூட்டியே சுற்றுலா பயணிகளுக்கு அளிக்கிறது. கோடை விடுமுறையில் குடும்பமாகவும், தனித்தனி யாகவும் சுற்றுலா செல்ல விரிவான ஏற்பாடுகளை ஐ.ஆர்.சி.டி.சி. செய்துள்ளது.

           சென்னை- ஊட்டி, முது மலைக்கு 3 பகல் 4 இரவு கள் கொண்ட சுற்றுலா திட்டத்திற்கு பெரியவர்களுக்கு ரூ. 4850, சிறிய வர்களுக்கு 1850 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோவை வரை ரெயில் மூலமாகவும், பின்னர் அங்கிருந்து கார் மூலம் சுற்றுலா பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

              சென்னையில் இருந்து கொடைக்கானல், பொள்ளாச்சி, வால்பாறை, சென்னை-தேக்கடி, தேனி, சென்னை-மைசூர், கூர்க், சென்னை- மூணாறு- தேக்கடி, சென்னை- ஆலப்புழா, சென்னை- கன்னியாகுமரி- ராமேஸ் வரம்-மதுரை, சென்னை- கொச்சி- மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்து செல் கிறார்கள். இது தவிர காசி, அலகா பாத், ஹரித்துவார், ரிஷி கேஷ், டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட வட மாநில புனித தலங்களுக்கு செல்லும் சுற்றுலா திட்டமும் உள்ளது.

                  15 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலா பயணத்திற்கு ஒருவருக்கு ரூ. 7700 கட்டணம். தங்கு மிடம், உணவு, ரெயில் கட்டணம் சேர்த்து நிர்ண யிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. சேவை மையம் செயல்படுகிறது. அங்கு நேரிலோ அல்லது போனிலோ தொடர்பு கொண்டு பயணம் தொடர்பான விரிவான தகவல்களை பெறலாம். மேலும் 90031-40681 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம்.

Read more »

வியாழன், பிப்ரவரி 24, 2011

களையிழந்த கடலூர் சில்வர் பீச்

கடலூர்:

              நகராட்சி உள்ளிட்ட துறைகளின் அலட்சியம் காரணமாக, கடலூர் சில்வர் பீச் களையிழந்து காணப்படுகிறது.  

                கடலூர் மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் சில்வர் பீச்சும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகத்தான் 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கடலூர் சில்வர் பீச் வளர்ச்சிப் பணிகளுக்காக, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பணம், பல்வேறு துறைகள் சார்பில் செலவிடப்பட்டு வந்தது. ஆனால் அண்மைக் காலமாக ஏற்கெனவே செய்யப்பட்ட பணிகளை முறையாக பராமரிக்காமலும், புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாமலும், சில்வர் பீச் புறக்கணிக்கப்பட்டும் கேட்பாரற்றும் கிடக்கிறது.  

                ஆனால் கடற்கரைப் பக்கம் தலைகாட்டும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில் மட்டும் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. கடற்கரையை வந்து எட்டிப் பார்த்துத் திரும்பினாலே போதும் கட்டணத்தக் கரந்து விடுகிறார்கள்.  இங்கு கடைபோடும் வணிகர்களுக்கும் கட்டணம் உண்டு. கடலூர் மக்களின் ஒரே பொழுதுபோக்கு அம்சம் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் தான். அதுவும் கோடைக்காலம் நெருங்கி விட்டால், கடலூர் மக்கள் பலரும் நாடும் ஒரே இடம் இக்கடற்கரைதான்.  

                      அண்மைக் காலமாக சில்வர் பீச் பராமரிப்புக்கு அப்பார்ப்பட்ட இடமாகக் காட்சி அளிக்கிறது. 18-ம் தேதி மாசி மகத் திருவிழாவுக்கு வந்த மக்கள் கூட்டம், அவர்களை நம்பி பொருள்களை கடைவிரித்த சிறு வணிகர்கள் அனைவரும் சேர்ந்து, கடற்கரையை அசுத்தத்தின் உயர் எல்லைக்குக் கொண்டு சென்று விட்டனர்.  இதனால் மெரீனாவுக்கு அடுத்த அழகான கடற்கரை என்ற பெயர் பெற்ற சில்வர் பீச் இன்று, அலங்கோலமாகக் காட்சி அளித்துக் கொண்டு இருக்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கான படகு குழாம், இருந்த இடம் தெரியாமல் சிதைந்து கிடக்கிறது.  

              குப்பைகளை அகற்ற தற்போது புதிய கலாசாரம் சில்வர் பீச்சில் உருவாகி இருக்கிறது. கரும்புச்சாறு பிழிந்த சக்கைகள், பாலித்தீன் பைகள் போன்றவற்றை ஆங்காங்கே போட்டு தீயிட்டு எரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.  இதனால் சில்வர் பிச் விரைவில் எரி சாம்பல்கள் நிறைந்த கருப்பு நிறக் கடற்கரையாக மாறும் அபாயம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. கடலூர் நகருக்கு உள்ளேயே நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள், விதிகளுக்கு மாறாகக் குப்பைகளை தெருக்களிலேயே எரிக்கும் வேலைதான் செய்கிறார்கள்.  

               அந்தக் கலாசாரம்தான் சில்வர் பீச்சுக்கும் பரவியிருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள். அவ்வப்போது சில்வர் பீச் அசுத்தம் அடையும் போதெல்லாம், ஏதேனும் தொண்டு நிறுவனங்கள்தான் முன்வந்து, சுத்தம் செய்து வருகின்றன. தற்போதும் மாசி மகத் திருவிழாவுக்குப் பின் அலங்கோலமாகக் காட்சிதரும் சில்வர் பீச், தன்னை அழகுபடுத்திக் கொள்ள, மீண்டும் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தேடிக் கொண்டு இருக்கிறதோ?

Read more »

வியாழன், ஜூன் 10, 2010

பிச்சாவரம் படகு ஓட்டுனர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

கிள்ளை : 

                 பிச்சாவரம் சுற்றுலா மைய படகு ஓட்டுனர் களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்துள்ளனர். சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் 1984ம் ஆண்டு படகு சவாரி துவங்கியது. இங்கு 35 படகு ஓட்டுனர்கள் பணியாற்றி வருகின்றனர். 16 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சுற்றுலாத் துறை இயக்குநருக்கு கோரிக்கை வைத் துள்ளனர். 

இது தொடர்பாக அவர்கள் அனுப்பியுள்ள மனு: 

                  சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட் டுள்ளது. மழை மற்றும் வெயில் காலத்தில் மிகவும் சிரமப்பட்டு படகுளை ஓட்டிச் சென்று சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கின்றோம். இதனால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. எனவே தற்போது சுற்றுலா மையத்தை தனியாரிடம் விடுவதாக அரசு எடுத்துள்ள முயற்சியை மறுபரிசீலனை செய்வதுடன், அனைத்து துறைகளிலும் 10 ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று கமிஷன் அடிப்படையில் பணியாற்றி வரும் 35 படகு ஓட்டிகளான எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

திங்கள், மார்ச் 08, 2010

பிச்சாவரத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை துவங்கியது


கிள்ளை:

             சிதம்பரம் அருகே கிள்ளை பிச்சாவரம் சுற் றுலா மையத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை துவங்கியுள்ளது. கோடைக் காலம் துவங்கியதால் சிதம்பரம் அருகே கிள்ளை பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை துவங்கியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர்.

                அத்துடன் சுற்றுலா மையத்தில் கடந்த நவம்பர் மாதம் 11ம்தேதி புராதன மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்மட்ட கோபுரத்தில் "டெலஸ் கோப்' துவக்கி வைத்தார்.  இரண்டு நிமிடத்திற்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. இதன் மூலம் இதுவரை 60 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்க சுற்றுலாத்துறை மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior