கிள்ளை:
சிதம்பரம் அருகே கிள்ளை பிச்சாவரம் சுற் றுலா மையத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை துவங்கியுள்ளது. கோடைக் காலம் துவங்கியதால் சிதம்பரம் அருகே கிள்ளை பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை துவங்கியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர்.
அத்துடன் சுற்றுலா மையத்தில் கடந்த நவம்பர் மாதம் 11ம்தேதி புராதன மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்மட்ட கோபுரத்தில் "டெலஸ் கோப்' துவக்கி வைத்தார். இரண்டு நிமிடத்திற்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. இதன் மூலம் இதுவரை 60 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்க சுற்றுலாத்துறை மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக