உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செல்லங்குப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செல்லங்குப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், அக்டோபர் 19, 2010

நிதிப் பற்றாக்குறையால் பாதியில் நிற்கும் கடலூர் செல்லங்குப்பம் சிமென்ட் சாலையால் மக்கள் அவதி


சிமெண்ட சாலை அமைக்க மணல் கொட்டப்பட்டு, 2 மாதங்கள் ஆகியும் பணி முடிவடையாததால் மணற்சாலையாக மாறிய செல்லங்குப்பம் சாலை.
  
கடலூர்:

               நிதிப் பற்றாக்குறையால் 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட சாலைப் பணி, பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல பணிகள் டெண்டர் விட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.  பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக கடலூர் நகரில் தோண்டப்பட்ட நகராட்சி சாலைகள் அதன்பிறகு செப்பனிடப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். சேதப்படுத்தப்பட்ட நகராட்சி சாலைகள் அனைத்தையும் செப்பனிட ரூ.  20 கோடி ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  

                 அண்மையில் மாநில அரசு உள்ளாட்சிகளுக்கு ரூ.  1000 கோடி வழங்க தீர்மானித்தது. இதைத்தொடர்ந்து, கடலூர் நகராட்சியில் 131 சாலைப் பணிகளுக்கு ரூ.  15 கோடி மதிப்பில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு மாநில அரசுக்கு அளிக்கப்பட்டது. ஆனால், 40 சாலைப் பணிகளுக்கு மட்டும் ரூ.  10 கோடி அனுமதிக்கப்பட்டு உள்ளதாக நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  இதனால் திட்டமிட்டபடி அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படுவது கேள்விக்குறியாகி உள்ளது. 

                   நிதி பற்றாக்குறையால் வேண்டியவர்கள், வேண்டாதவர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர் வார்டு, எதிர்க்கட்சி உறுப்பினர் வார்டு என்று பாகுபாடு பார்த்து பணிகளை வழங்கும் சூழ்நிலையும் உருவாகி இருப்பதாக சில வார்டு உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.  இந்த நிலையில் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்ட சாலைப் பணிகள் பல, நிதி பற்றாக் குறையாலும், பொறியாளர் பணியிடம் காலியாக இருப்பதாலும் பாதியிலேயே நிற்கிறது. அத்தகைய பணிகளில் ஒன்றுதான் 34-வது வார்டு செல்லங்குப்பம் இணைப்புச் சாலை. ரூ.  12 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி 2 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. 

                     சாலைகளின் ஓரங்களில் செங்கல் கட்டுமானம் எழுப்பி, சாலையில் ஆற்று மணல் கொட்டும் வேலை முடிவடைந்தது.  அதற்கு மேல் சிமென்ட் தளம் அமைக்கும் வேலை 2 மாதங்களாகியும் நடைபெறவில்லை. இதனால் அச்சாலையைப் பயன்படுத்தும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  

இதுகுறித்து நகராட்சி வார்டு உறுப்பினர் கூறியது 

                           "நகராட்சி பொது நிதியில் நடைபெற்றுள்ள இந்தப் பணிக்கு இதுவரை நகராட்சி நிதி தரவில்லை என்று ஒப்பந்ததாரர் தரப்பில் கூறப்படுகிறது. இனி பணம் கிடைத்தால்தான் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ கூறினார்.  இதேபோல் மேலும் பல பணிகள், டெண்டர் விட்டும் தொடங்கப்படாமல் கிடப்பில் இருப்பதாக நகராட்சி உறுப்பினர்கள் சிலர் புகார் தெரிவித்தனர். 

Read more »

சனி, ஜூன் 12, 2010

முன்னாள் எம்.எல்.ஏ., உறவினர் வீடு தாக்கு: 12 பேர் கைது

 கடலூர் : 

               முன்னாள் எம்.எல்.ஏ., உறவினர் வீடு மற்றும் காரை தாக்கி சேதப்படுத்திய வழக்கில் 12 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் செல்லங்குப்பம் மின்வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் வேலாயுதபாண்டியன். தேங்காய் மண்டி உரிமையாளரான இவர் கடந்த 6ம் தேதி கடலூர் முதுநகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்., சென்டரில் பணம் எடுத்தபோது, செல்லங்குப்பம் காலனியைச் சேர்ந்த சேதுராமன், சுமன், ராஜா உள்ளிட்டோர் பணம் கேட்டு தகராறு செய்தனர்.

                    இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் இரவு வேலாயுத பாண்டியன் வீட்டையும், அங்கு நின்றிருந்த "இநோவா' காரை அடித்து நொறுக்கியது. இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் மதியம் சுமன் உட்பட 12 பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்து தலைமறைவாக உள்ள சேதுராமன், ராஜாவை தேடிவருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தில் தொடர்பில்லாதவர்களை கைது செய்திருப்பதாகவும், அவர்களை விடுவிக்க கோரி செல்லங்குப்பம் காலனி மக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். தகவலின் பேரில் டி.எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Read more »

திங்கள், ஜூன் 07, 2010

மாஜி எம்.எல்.ஏ., உறவினர் வீட்டில் தாக்குதல்கடலூரில் பரபரப்பு: கும்பலுக்கு வலை

கடலூர்: 

                      பணம் கேட்டு மிரட்டி முன்னாள் எம்.எல்.ஏ., உறவினர் வீடு மற்றும் காரை தாக்கி சேதப்படுத்திய கும் பலை போலீசார் தேடிவருகின்றனர். கடலூர் செல்லங்குப்பம் மின் வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் வேலாயுதபாண்டியன். முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தியின் உறவினரான இவர் நேற்று மாலை கடலூர் முதுநகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்., சென்டரில் பணம் எடுத்தார். அப்போது அங்கு வந்த செல்லங்குப்பம் காலனியைச் சேர்ந்த சேதுராமன், சுமன், ராஜா உள்ளிட்டோர் வேலாயுதபாண்டியனிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர். கும்பல் கூடியதால் சேதுராமன் உள்ளிட்டோர் கலைந்து சென்றனர்.இந்நிலையில் சேதுராமன், சுமன், ராஜா உள்ளிட்ட கும்பல் இரவு 8 மணி அளவில் செல்லங்குப்பத்தில் உள்ள வேலாயுத பாண் டியன் வீட்டிற்கு சென்று அங்கு நின்றிருந்த "இநோவா' காரை அடித்து நொறுக்கினர். டயரை வெட்டி சேதப்படுத்தினர். பின்னர் வீட்டின் ஜன்னலை உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். தகவலறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்தை பார் வையிட்டு விசாரித்து வருகின்றனர்.

Read more »

சனி, மார்ச் 27, 2010

கடலூரில் போலீஸ் உடையுடன் சுற்றித் திரிந்தவர் கைது


கடலூர்:

                  போலீஸ் உடையுடன் கடலூரில் சுற்றித் திரிந்த இளைஞர் ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். கடலூர் முதுநகர் போலீஸôர் கடலூர்- சிதம்பரம் சாலையில் செல்லங்குப்பம் அருகே வாகனத் தணிக்கை செய்து கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும் நிலையில் காணப்பட்ட இளைஞர் ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். அவர் வைத்து இருந்த பையில் போலீஸ் உடைகளும், போலீஸ் உடையுடன்  எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையும் இருந்ததைப் போலீஸôர் கைப்பற்றினர். மேற்கொண்டு விசாரித்ததில் அவர் பெயர் ராமச்சந்திரன் (27) என்றும், நெல்லை மாவட்டம் கோட்டைக் கருங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. தான் கடலூருக்கு மாறுதலாகி வந்து இருக்கும் போலீஸ் காவலர் என்றுகூறி, கடலூர் செல்லங்குப்பத்தில் சேகர் என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து, கடந்த 5 மாதங்களாகத் தங்கி இருந்ததும் தெரியவந்தது. ஆனால், அவர் தனக்கு போலீஸ் காவலராக பணிபுரிய வேண்டும் என்று ஆசை இருந்ததாகவும், அதனால் போலீஸ் உடை அணிந்ததாகவும் தெரிவித்தார். அவரை கடலூர் முதுநகர் போலீஸôர் கைது செய்து, அவர் போலீஸ் உடையுடன் ஏதேனும் குற்றங்கள் புரிந்து உள்ளாரா என்று விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Read more »

வியாழன், மார்ச் 25, 2010

தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலையங்கள் மூலம் பாடப் புத்தகங்கள் விநியோகம் தொடக்கம்


கடலூர்:
 
                      தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலையங்கள் மூலம், பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்கள் விநியோகம் புதன்கிழமை தொடங்கியது. ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது. ஒரு கல்வி மாவட்டத்துக்கு ஒரு மையம் வீதம் தேர்வு செய்து, அவற்றுக்குத் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டு, பள்ளிகள் நேரடியாக அந்த மையங்களுக்கு வந்து பாடப்புத்தகங்களை வாங்கிச் செல்லும் முறை, கடந்த ஆண்டுகளில் பின்பற்றப்பட்டு வந்தது. புத்தகங்களைப் பெற்றுச் செல்ல பள்ளிகளில் போதிய ஆள்கள் இல்லாமை, வாகன வசதிக்குறைவு போன்ற காரணங்களால் இந்த முறையில் பிரச்னைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.எனவே பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களை விநியோகிக்க, இந்த ஆண்டு தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அஞ்சல் துறையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது. 
 
                     அதன்படி பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்களை கொண்டு சென்று, வழங்கும் பொறுப்பை அஞ்சல் நிலையங்கள் ஏற்றுக் கொண்டு உள்ளன.அதன்படி பள்ளிகளின் பாடப் புத்தகங்கள் தேவை, அந்தந்த மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்குகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அஞ்சலக அதிகாரிகள் வந்து, பாடப் புத்தகங்களைப் பெற்றுச் சென்று, பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் கொண்டுபோய் ஒப்படைத்து விடுவார்கள். தலைமை ஆசிரியர்கள் மே இறுதிக்குள் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து பாடப் புத்தகங்களை வழங்குவர். ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் போது அனைத்து மாணவர்களிடமும் பாடப்புத்தகங்கள் இருக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
                     இதன்படி கடலூர் மாவட்டத்துக்கு, 5 லட்சம் பாடப் புத்தகங்கள் வந்துள்ளன. இவைகள் கடலூர் செல்லங்குப்பத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் நிறுவன சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. புதன்கிழமை பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடங்கியது. அஞ்சல் துறை அதிகாரிகள் வந்து பெற்றுச் சென்றனர்.பாடப் புத்தகங்கள் விநியோகத்தை கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி தொடங்கி வைத்தார்.

Read more »

திங்கள், மார்ச் 08, 2010

சுனாமி குடியிருப்புக்கு அடிக்கல் நாட்டு விழா

கடலூர்:

                கடலூர் செல்லங்குப்பத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் சுனாமி குடியிருப்புக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் 1,678 சுனாமி குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டு அதில் பரங்கிப்பேட்டையில் 168ம், பனங்காட்டு காலனியில் 74ம் கட்டி முடிக்கப் பட்டுள்ளது.

                செல்லங்குப்பத்தில் 219 வீடுகள் முடியும் தருவாயிலும், கிள்ளை, முடசல் ஓடை பகுதிகளில் 103 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.  இது தவிர செல்லங்குப்பம் பகுதியில் 355 வீடுகளும் மற்றும் பனங்காட்டு காலனியில் 45 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா செல்லங்குப்பத்தில் நடந்தது.இதன் மூலம் சோனங் குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, மோகன் சிங் வீதி, ஆற்றங்கரை வீதி பகுதி மக்கள் பயனடைவர்.
                 நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் தமிழரசன், தங்கமணி, நித்யானந்தம், கோமதி, குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் சையத் சுலைமான் சேட், உதவி நிர்வாக பொறியாளர் ஸ்ரீதர், உதவி பொறியாளர்கள் ஜெயக்குமார், சுகுமார், இளநிலை பொறியாளர் மதிமாறன், பிளஸ் தொண்டு நிறுவன குழு தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior