கடலூர்:
கடலூர் செல்லங்குப்பத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் சுனாமி குடியிருப்புக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் 1,678 சுனாமி குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டு அதில் பரங்கிப்பேட்டையில் 168ம், பனங்காட்டு காலனியில் 74ம் கட்டி முடிக்கப் பட்டுள்ளது.
செல்லங்குப்பத்தில் 219 வீடுகள் முடியும் தருவாயிலும், கிள்ளை, முடசல் ஓடை பகுதிகளில் 103 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இது தவிர செல்லங்குப்பம் பகுதியில் 355 வீடுகளும் மற்றும் பனங்காட்டு காலனியில் 45 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா செல்லங்குப்பத்தில் நடந்தது.இதன் மூலம் சோனங் குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, மோகன் சிங் வீதி, ஆற்றங்கரை வீதி பகுதி மக்கள் பயனடைவர்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் தமிழரசன், தங்கமணி, நித்யானந்தம், கோமதி, குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் சையத் சுலைமான் சேட், உதவி நிர்வாக பொறியாளர் ஸ்ரீதர், உதவி பொறியாளர்கள் ஜெயக்குமார், சுகுமார், இளநிலை பொறியாளர் மதிமாறன், பிளஸ் தொண்டு நிறுவன குழு தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக