உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




நெல் சாகுபடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெல் சாகுபடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், நவம்பர் 17, 2011

கடலூர் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு: நெல் விவசாயிகள் கடுமையாக பாதிப்பு

              கடலூர் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு காரணமாக, நெல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 
 
              கடலூர் மாவட்டத்தின் டெல்டா பகுதியில் 1.45 லட்சம் ஏக்கர் உள்பட, 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் நாற்று நடவு முடிவடைந்து உள்ளது. இவற்றில் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் நெற்பயிருக்கு, உடனடியாக யூரியா தேவைப்படுகிறது. ஆனால் போதுமான அளவு யூரியா கிடைக்காததால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நெல் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பொட்டாஷ் உரத்தேவை முழுமைக்கும் இந்தியா, வெளிநாடுகளையே நம்பி இருக்கிறது. டி.ஏ.பி. உரத்தேவையில் 80 சதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 
 
            இந்தியாவில் யூரியா உற்பத்தி செய்யும் ஆலைகள் பல இருந்தும், பெட்ரோலிய பொருள்கள் விலையேற்றம் காரணமாக பல ஆலைகள் யூரியாவை உற்பத்தி செய்யாமல் வெளிநாடுகளில் இருந்து வாங்கி விற்பனை செய்யத் தொடங்கி இருக்கின்றன. இந்திய தேவைக்கான யூரியாவில் 80 சதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் ரசாயன உரங்களுக்கு தமிழகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 
 
கடலூர் மாவட்ட யூரியா தேவை குறித்து வேளாண் அதிகாரி கூறியது: 
 
              கடலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டு உள்ள சுமார் 2.5 லட்சம் ஏக்கர் நெற்பயிரில் 1.5 லட்சம் ஏக்கர் பயிருக்கு நவம்பர் மாதத்துக்கு மட்டும், 8 ஆயிரம் டன் யூரியா தேவைப்படுகிறது. ஆனால் கடந்த வாரம் 1,400 டன் யூரியா கடலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு டான்ஃபெட் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது. தனியார் உரக் கடைகளுக்கு கடந்த வாரம் 800 டன் யூரியா வழங்கப்பட்டது. மேலும் 600 டன் யூரியா தனியார் கடைகளுக்கு வந்து கொண்டு இருக்கிறது. மேலும் 1,500 டன் யூரியா கடலூர் மாவட்டத்துக்கு உடனடி தேவையாக உள்ளது. 
 
              தமிழ் நாட்டுக்குத் தேவையான யூரியா, கப்பல் மூலம் ஆந்திர மாநிலம் கிருஷ்ணப்பட்டினம் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது, கடலூர் மாவட்டத்துக்கு ரயில் வேகன்கள் மூலம் விருத்தாசலம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து விநியோகிக்கப்படும் என்றார். மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், இப்போது பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிருக்கு யூரியா அத்தியாவசியத் தேவையாக உள்ளது. யூரியா பற்றாக்குறை பயிர்களை பெரிதும் பாதிக்கும். கடந்த வாரம் கூட்டுறவு சங்கங்களுக்கு விநியோகிக்கப்பட்ட 1,400 டன் யூரியா முழுவதும் ஒரு மணி நேரத்தில் காலியாகிவிட்டது. 
 
               கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகளுக்குத்தான் யூரியா வழங்கப்பட்டது. மற்றவர்கள் தனியார் கடைகளைத்தான் நம்பி இருக்கிறார்கள். ஆனால் அங்கும் யூரியா கிடைப்பது இல்லை. பலர் அதிக விலைக்கும் விற்கிறார்கள். கப்பல் மூலம் மேற்கொண்டு யூரியா வந்துகொண்டு இருப்பதாக வேளாண் அதிகாரிகள் தெரிவிப்பதாக தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

வியாழன், ஜூலை 21, 2011

கடலூர் மாவட்டத்தில் அழிந்து வரும் நெல் விவசாயம்

கடலூர்:

            தொடர்ந்து நெல் விவசாயம் செய்ய வேண்டுமா என்ற சலிப்பு, தமிழக நெல் விவசாயிகளிடையே ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நெல் பயிரிடும் பரப்பளவும் நெல் உற்பத்தியும், நெல் விவசாயத்துக்கான ஆர்வமும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 

                இந்த நிலையை மாற்ற நெல் விவசாயிகளுக்கு அரசு மேலும் சலுகைகளை அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  2010-11-ம் ஆண்டில் 21.5 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யத் திட்டமிட்டு 20.71 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. 81.5 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யத் திட்டமிட்டு 71.5 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப் பட்டது. 

               கடலூர் மாவட்டத்தில் சம்பா உள்ளிட்ட அனைத்து பருவங்களிலும் 3.5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப் படுகிறது.  தமிழகத்தின் மிகப்பெரிய சாகுபடியான சம்பா நெல் சாகுபடிப் பணிகள், தமிழகம் முழுவதும் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க இருக்கிறது. காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 16 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படுகிறது. டெல்டா பாசன நெல் சாகுடி பெரும்பாலும், கர்நாடகத்தில் பெய்யும் மழையின் அளவையும், கர்நாடக அரசின் பெருந்தன்மையின் அளவையும் பொறுத்ததாக மாறியிருக்கிறது.  நெல் விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவு அதிகரித்து வரும் நிலையில், நியாயமான விலை கிடைக்கவில்லை என்பது விவசாயிகளின் கருத்து. 

                அத்துடன் கடந்த சில ஆண்டுகளாக கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தால், விவசாய வேலைகளுக்கு ஆள்கள் கிடைப்பது இல்லை என்பது விவசாயிகளை பெரிதும் கவலையில் ஆழ்த்தி வருகிறது. இதனால் விவசாயக் குடும்பங்களின் அடுத்த தலைமுறை, விவசாயத்தை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.  தமிழகத்தில் நெல் உற்பத்தி குறைந்த போதிலும் மக்களுக்குத் தேவையான அரிசி கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் இருந்து வந்துவிடுவதால், உற்பத்திக் குறைவு பற்றி அரசு, அதிகம் சிந்திக்கும் நிலையில் இல்லை. 

                ஆனால் நெல் விவசாயிகளுக்கோ, இதை விட்டால் வேறு வழியில்லை என்ற பரிதாபநிலை. டெல்டா பாசனப் பகுதிகளில் நெல்லை விட்டால் வேறு பயிர்களை பயிரிட முடியாத நிலை. இதனால் எத்தனை கஷ்ட நஷ்டம் ஏற்பட்டாலும், ஆள் பற்றாக் குறை என்றாலும் விவசாயம் செய்தே ஆகவேண்டிய நிர்பந்தம், நெல் விவசாயிகளை பெரிதும் சலிப்பில் ஆழ்த்தி இருக்கிறது.  சம்பா அறுவடை காலத்தில் நெல் விலை, நல்ல தரமான காய்ந்த நிலையில் அரசு நிர்ணய விலையான ரூ. 1100-ஐ விட, சற்றும் உயரவில்லை. மாறாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொஞ்சம் ஈரப்பதம், கொஞ்சம் தரம் குறைவான நெல் குண்டால் ரூ. 600-க்கும் ரூ. 700-க்கும் அடிமாட்டு விலைக்கு தனியார் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப் பட்டது. 

                  சம்பா அறுவடை காலத்தில் பொன்னி புழுங்கல் அரிசி, கிலோ ரூ. 24 முதல் ரூ. 28 வரை இருந்தது, தற்போது ரூ. 28 முதல் ரூ. 32 வரை என உயர்ந்து இருக்கிறது. ஆனால் நெல்விலை இன்னமும் அடிமட்டத்திலேயே உள்ளது என்கிறார்கள் விவசாயிகள்.  6 மாத சம்பா நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ஆகும் செலவு சுமார் ரூ. 15 ஆயிரம். அதில் இருந்து கிடைக்கும் நெல்லின் விலை ரூ. 18 ஆயிரம். ஒரு ஏக்கர் நிலம் வைத்து இருக்கும் நெல் விவசாயிக்கு 6 மாதத்துக்கு ரூ. 3 ஆயிரம்தான் வருமானம் வருகிறது என்கிறார்கள் விவசாயிகள்.  

இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் கே.வி. கண்ணன் கூறுகையில், 

                 "கடந்த 10 ஆண்டுகளில் வேளாண் கருவிகளுக்குப் பயன்படும் டீசல் விலை 300 சதவீதமும், பூச்சி கொல்லி மருந்துகள் விலை 150 சதவீதமும், தொழிலாளர்களின் ஊதியம் 200 சதவீதமும், உரத்தின் விலை 45 சதவீதமும் உயர்ந்து இருக்கும் நிலையில், நெல் விலை 35 சதவீதம் மட்டுமே உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் எப்படி நெல் விவசாயம் செய்ய முடியும் என்று சலிப்புதான் ஏற்படுகிறது. 100 நாள் வேலைத்திட்டம் வேளாண்மையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே கேரளா, கர்நாடகா மாநிலங்களைப் போல் தமிழகத்திலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் பதிவு செய்து கொண்டவர்களை, வேளாண் பணிகளுக்குத் திருப்ப வேண்டும். அரசு வழங்கும் கூலி போக மீதியை விவசாயிகள் வழங்குவர். வெட்டிய ஏரியை, வாய்க்காலை மீண்டும் மீண்டும் வெட்டிப் பயனில்லை' என்றார் அவர்.  

மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி. ரவீந்திரன் கூறுகையில், 

              "பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் நெல் கொண்டுவர அனுமதிக்கக் கூடாது. நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த வேண்டும். பாதிக்கப்படும் ஒவ்வொரு விவசாயியும் இழப்பீடு பெறும் வகையில், பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். இயந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில், வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு, இயந்திரங்கள் சென்றுவர சாலை வசதியை மேம்படுத்த வேண்டும்' என்றார்.  






Read more »

வெள்ளி, ஜனவரி 28, 2011

"ராஜராஜன் 1000" நெல் சாகுபடி முறைக்கு அரசு உதவி


(விருத்தாசலம்) நீர்வள, நிலவளத் திட்டத்தின்கீழ் விழுப்புரம் மாவட்டம் தச்சூரில் "ராஜராஜன் 1000' நெல் சாகுபடி முறையை பயன்படுத்தியுள்ள விவசாயிகள்.
 
விருத்தாசலம்: 

           கோமுகி அணை பாசன விவசாயிகள் ராஜராஜன் 1000 நெல் சாகுபடி முறையில் பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம். மேலும் இம்முறையை ஊக்குவிக்க அரசு பல்வேறு உதவிகளை செய்கிறது.  

இம்முறை குறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் அருட்செந்தில் தெரிவித்தது: 

           தமிழகத்திலுள்ள ஆற்றுப்படுகை பாசனப் பகுதிகளை அதிகப்படுத்தும் வகையில் உலக வங்கி உதவியுடன், தமிழ்நாடு அரசு நீர்வள, நிலவளத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.  இம்முறையின் மூலம் விழுப்புரம், கடலூர் மற்றும் சேலம் மாவட்டப் பகுதிகளில் கோமுகி அணை பாசனப் பகுதிகளில் ராஜராஜன் 1000 நெல் சாகுபடி முறையை விவசாயிகளிடத்தில் ஊக்குவிக்க அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதன்படி விவசாயிகளுக்கு களைக்கருவி, நடவு அடையாளக் கருவி, உரங்கள் உள்ளிட்ட பொருள்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.  

           ராஜராஜன் 1000 நெல் சாகுபடி முறையில் 1 ஏக்கருக்கு நாற்றங்கால் 40 ச.மீ. அளவும், 3 கிலோ விதையும் போதுமானது. ஆனால் நடைமுறை சாகுபடிக்கு நாற்றங்காலில் அளவு 320 ச.மீ. தேவைப்படுகிறது. மேலும் விதை சுமார் 16 முதல் 24 கிலோ வரை தேவைப்படும். ராஜராஜன் 1000 முறையில் நாற்று வயது 14 முதல் 15 நாள்களாகும். எனவே விவசாயிகள் இம்முறையைப் பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக லாபம் பெறலாம்.  நடைமுறைப்படுத்த வேண்டிய நாற்றங்கால் முறை: 1 ஏக்கருக்கு மேற்கண்டபடி விதையும், அளவும் போதுமானது. 

           நடவு வயலின் ஓரத்தில் 1-க்கு 5 மீ. அளவுள்ள 8 மேடைகளை அருகிலிருக்கும் மண்ணை எடுத்து உருவாக்க வேண்டும். இதில் மக்கிய தொழு உரத்தை தெளிக்கலாம். நிலப்பரப்புக்கு மேல் 5 செ.மீ. உயரம் மேடை அமைத்த பின் மேடைமேல் பாலித்தின் அல்லது பிரித்த உரச் சாக்குகளையோ பரப்ப வேண்டும். மீண்டும் 4 செ.மீ. உயரத்துக்கு மண்ணை நிரப்ப வேண்டும். விதைநேர்த்தி செய்ய 1 கிலோ விதைக்கு சூடோமோனாஸ் 10 கிராம் மற்றும் அசோபாஸ் உயிர் உரம் 3 கிலோ விதைக்கு 1 பாக்கெட் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். சூடோமோனாஸ் மற்றும் அசோபாஸ் ஆகியவற்றை தேவையான அளவு அரிசிக்கஞ்சி அல்லது தண்ணீரில் கரைத்து பின் அவற்றை விதைகளுடன் நன்றாக கலந்து நிழலில் உலர்த்த வேண்டும். 

             உலர்த்திய விதைகளை தண்ணீரில் 24 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி பின் முளைகட்ட வேண்டும்.  முளைகட்டிய பின் ஒவ்வொரு 5 ச.மீ. மேடையிலும் 375 கிராம் விதையை பரவலாக விதைக்க வேண்டும். பின்னர் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்கலாம் அல்லது சுற்றியிருக்கும் பள்ளங்களில் தண்ணீர் நிரப்பலாம். இதைத் தொடர்ந்து முளைத்த நாற்றுகளை மேடை மண்ணோடு பெயர்த்து வயலுக்கு எடுத்துச் செல்வது சிறப்பானதாகும். 

              இதனால் நாற்றுகளின் வேர்ச் சூழ்நிலை மாறாமல் நடப்பட வாய்ப்பிருப்பதால், செடிகள் பச்சை பிடிப்பது உடனடியாகத் தொடங்கும். நாற்றுகளை மண்ணோடு பத்தையாக எடுத்து முறம் அல்லது அட்டைப் பெட்டியில் வைத்து, நடவு இடத்தில் நடும்போது நாற்றுகளை பிரித்து நடலாம்.  ÷இம்முறையில் 25-க்கு 25 செ.மீ. இடைவெளியில் சதுர நடவு செய்ய வேண்டும். இதில் அடையாளமிட்ட கயிறையோ அல்லது நடவு அடையாளக் கருவியையோ பயன்படுத்தலாம். 1 குத்துக்கு 1 நாற்று என்ற விகிதம் முடிந்த அளவுக்கு வேர்கள் மேல் நேக்காமலும், ஆழமாக இல்லாமலும் நடுவது நல்லது. 

             இம்முறையில் பெரும்பாலும் இயற்கை உரங்கள் மற்றும் உயிர் உரங்களை ரசாயன உரங்களோடு பயன்படுத்துவது மட்டுமல்லாமல், பயிருக்குத் தேவைப்படும் காலகட்டங்களில் அவற்றைப் பிரித்து இடவேண்டும். மேலும் இம்முறையை பயன்படுத்துவதால் ஆள் செலவு குறைகிறது. வயலில் நீரைத் தேக்க வேண்டிய அவசியமில்லை. அதிக தூர்கள் வரும். இதனால் அதிக கதிர்கள் மற்றும் மணிகள் உண்டாகும். இதனால் அதிக லாபம் பெறலாம் என அவர் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து தகவல்களை கோமுகி நீர்பாசன விவசாயிகள் சங்கங்கள் மூலமாக தொடர்பு கொண்டு பெறலாம் எனவும் அவர் கூறினார்.

Read more »

செவ்வாய், ஜனவரி 25, 2011

கடலூர் மாவட்டத்தில் சம்பா நெல் விலை கடும் வீழ்ச்சி!


 
கடலூர்:
 
          கடலூர் மாவட்டத்தில் சம்பா நெல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளதால், நெல்லை சேமித்து வைத்து, உரிய விலை கிடைக்கும் காலத்தில் விற்பனை செய்ய வசதியாக, சேமிப்புக் கிடங்கு வசதிகளை அரசு உடனடியாகச் செய்து கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.  
 
            கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 1.24 லட்சம் ஏக்கர் உள்பட 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.  தற்போது காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், வடவாறு பாசனப் பகுதிகள் பெண்ணாடம், கறிவேப்பிலங்குறிச்சி பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை தொடங்கி விட்டது.  இதுவரை 15 ஆயிரம் ஏக்கரில் அறுவடை முடிவடைந்து விட்டது.  
 
              நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், 112 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.  இந்நிலையில் நெல் வியாபாரிகள் அறுவடை இயந்திரங்களுடன், நெல் கொள்முதலில் களத்தில் இறங்கி உள்ளனர்.  ÷தற்போது அறுவடை ஆகும் சன்னரக நெல்லுக்கு, அரசு நேரடிக் கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலுக்கு ரூ. 1,100 வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ. 11 வரை தற்போது விலை கிடைக்கிறது.  
 
           ஆனால் தனியார் நெல் வியாபாரிகள், சன்னரகம் மூட்டை (62 கிலோ) ரூ. 628-க்கு கொள்முதல் செய்கிறார்கள் (கிலோ விலை சுமார் ரூ. 11).  ÷பொதுவாக சம்பா அறுவடை காலத்தில் சன்னரக நெல்லுக்கு அரசு கொள்முதல் நிலையங்களைவிட, தனியார் வியாபாரிகள் குறைந்தது ரூ. 100 ஆவது கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்வார்கள்.  மேலும் டிசம்பர் மாதத்தில் பி.பி.டி. நெல் (பழையது) குவிண்டால் ரூ. 1,500-க்கு விவசாயிகள் விற்பனை செய்து உள்ளனர்.  
 
          எனவே இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தற்போது தனியார் வியாபாரிகளின் கொள்முதல் விலை, அடிமாட்டு விலை என்றும், நெல் சாகுபடிச் செலவைக் கணக்கிட்டால் இந்த விலை கட்டுபடியாகாது என்றும் கூறுகிறார்கள் விவசாயிகள்.  ÷களத்துக்கே வந்து தனியார் கொள்முதல் செய்கிறார்கள் என்பதைவிட, அரசு கொள்முதல் நிலையங்களைவிட எந்த வகையிலும் தனியார் வியாபாரிகளால் விலையில் ஆதாயம் இல்லை என்றும் விவாயிகள் கூறுகிறார்கள்.  
 
          எனவே நெல்லை சேமித்து வைத்து நியாயமான விலை கிடைக்கும் காலத்தில் விற்பனை செய்வதற்கு ஏற்றவகையில், அரசு சேமிப்புக் கிடங்கு வசதிகளை மேம்படுத்துவதைத் தவிர வேறுவழியில்லை என்கிறார்கள் விவசாயிகள்.  
 
இது குறித்து மாவட்ட உழவர் மன்றங்களில் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 
 
             "சன்னரக நெல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது. விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க, மத்திய மாநில அரசுகளின் சேமிப்புக் கிடங்குகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சேமிப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இங்கு சேமிக்கும் விவசாயிகளுக்கு விளைப் பொருளின் அடக்க விலையில் 90 சதவீதம் கடன் வழங்கப்படுகிறது. இந்த வசதியை விரிவுபடுத்த வேண்டும்.  ÷நெல்லுக்கு மத்திய அரசு அறிவித்து இருக்கும் கூடுதல் விலை அடிப்படையில் தமிழகத்தில் நெல் விலையை உயர்த்த வேண்டும்' என்றார்.  
 
காவிரி டெல்டா விவசாயிகள் சங்க துணைத் தலைவர் கண்ணன் கூறுகையில், 
 
               "டிசம்பர் மாதத்தில் சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 1,500 கிடைத்தது. ஆனால் தற்போது ரூ.1,100-க்கு மேல் கிடைக்கவில்லை.  தனியார் வியாபாரிகள் நெல் வாங்கவே தயக்கம் காட்டுகிறார்கள். காரணம் கர்நாடக மாநிலத்தில் இருந்து சன்னரக நெல்லும் அரிசியும் வந்து குவிந்து கொண்டு இருக்கிறது.  சன்னரக நெல் குவிண்டால் ரூ. 1,100-க்கு கொள்முதல் செய்தால் அதில் இருந்து கிடைக்கும் அரிசி விலை, மூட்டைக்கு லாபம் ரூ. 250 உள்பட கிலோ ரூ. 20 தான்.  
 
              ஆனால் சந்தையில் சன்னரக அரிசி விலை, கிலோவுக்கு ரூ. 30-க்குக் கீழ் குறையவில்லை. அந்த விலை விவசாயிக்குக் கிடைக்கவில்லையே. காரணம் இடைத்தரகர்கள். ÷தற்போது நெல் கொள்முதல் செய்பவர்கள் பெரும்பாலும் இடைத்தரகர்கள்தான். குறைந்தபட்சம் மத்திய அரசு அறிவித்து இருக்கும் புதிய விலை அடிப்படையில், தமிழக அரசு நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்' என்றார்.

Read more »

வியாழன், நவம்பர் 25, 2010

நெற்பயிரைத் தாக்கும் பாக்டீரியா இலைக்கீற்று நோய்


பாக்டீரியா இலைக்கீற்று நோய்த் தாக்குதலுக்கு உள்ளான நெற்பயிர் .
 

            தற்போது பயிரிடப்பட்டுள்ள பிபிடி 5204, ஏடிடி 39 போன்ற நெல் ரகங்களில் பாக்டீரியா இலைக் கீற்று நோய்த் தாக்குதல் அதிகளவில் உள்ளது.

               இத்தாக்குதலில் இருந்து பயிரைக் பாதுகாக்கும் முறை குறித்து திரூர் நெல் ஆராய்ச்சி நிலையத் தலைவர் கோ.வி.ராமசுப்பிரமணியம் தலைமையில், உதவிப் பேராசிரியர்கள்  விவசாயிகளுக்கு வழிமுறைகளை விளக்கி வருகின்றனர். 

பாக்டீரியா இலைக் கீற்று நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது குறித்து உதவிப் பேராசிரியர் சுமதி கூறும் போது, 

                "நெல் பயிரை இலைக் கீற்று நோய்த் தாக்கும் போது சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். உதாரணமாக ஆரம்ப நிலையில் இலையின் சிறு நரம்புகளுக்கிடையில் நீர்க்கசிவான கீற்றுக்கள் தோன்றி பின்னர் இலை செம்பழுப்பு நிறமாக மாறும். இலைக் கீற்றுகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இலைகள் முழுவதும் பரவி பின்னர் இலைகள் காய்ந்து விடும். இதுபோல் அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை கீழ்கண்ட முறைகளில் பாதுகாக்கலாம்

பாதுகாப்பு முறைகள்:  

                நோய் தோன்றியுள்ள வயல்களில் இருந்து மற்ற வயல்களுக்கு நீர் பாய்ச்சக் கூடாது. நோய் தாக்கிய பயிரில் இருந்து விதைகளை சேகரிக்கக் கூடாது. மண் பரிசோதனை செய்து அதன்படி தழைச்சத்து உரமிட வேண்டும். இந்நோயைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு கோசைட் 200 கிராம் அல்லது 18 கிராம் ஸ்ட்ரெப்டோ சைக்கிளின் அல்லது ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட்டுடன் 500 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு கலந்து நோயின் தீவிரத்துக்கு ஏற்ப ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தெளிக்க வேண்டும். இதுபோன்ற முறைகளை விவசாயிகள் கையாண்டால் நோயை கட்டுப்படுத்தி லாபமடையலாம்' என்றார்.

Read more »

திங்கள், ஜூலை 19, 2010

செம்மை நெல் சாகு​ப​டிக்கு மாற​லாமே!

செம்மை நெல் சாகு​படி முறை​யில் நாற்று நடப்​ப​டும் வயல்.​ செம்மை நெல் சாகு​ப​டி​யால் ஒரு நாற்று பல்​வேறு கிளை​க​ளாக செழித்து வளர்ந்து இருக்​கும் வயல்.

கட​லூர்:
               அகில இந்​திய அள​வில் வேளாண் உற்​பத்தி குறைந்து வரு​வ​தாக புள்ளி விவ​ரங்​கள் தெரி​விக்​கின்​றன.​ தமி​ழ​கத்​தின் பிர​தான சாகு​ப​டிப் பயிர் நெல்.​ 
               நெல் உற்​பத்​தி​யில்,​​ இந்​தி​யா​வில் 7-வது இடத்​தில் தமி​ழ​கம் உள்​ளது.​ ​ ​இந்த நிலை​யில் கிரா​மப்​புற வேலை உறு​தித்​திட்​டம் செயல்​ப​டத் தொடங்​கியதும்,​​ விவ​சாய வேலை​க​ளுக்கு ஆட்​கள் கிடைப்​பது இல்லை என்ற நிலை உரு​வாகி விட்​டது.​ எனவே விவ​சா​யம் காப்​பாற்​றப்​பட வேண்​டு​மா​னால்,​​ இயந்திர மய​மாக்​கல் மற்​றும் நவீன தொழில் நுட்​பங்​கள் மூலம் உற்​பத்​தி​யைப் பெருக்​கு​த​லைத் தவிர வேறு வழி​யில்லை.​ ​இ​யந்​தி​ரங்​க​ளைப் பயன்​ப​டுத்தி,​​ நெல் உற்​பத்​தி​யைப் பெருக்​கு​வ​தில் சாதனை ஏற்​ப​டுத்​தி​வ​ரும் திட்​டம்,​​ செம்​மை​நெல் சாகு​ப​டித் திட்​டம் ஆகும்.​ 2000க்கு முன்​னால் தென்​னாப்​பி​ரிக்கா அருகே மட​காஸ்​கர் தீவில் செயல்​ப​டுத்​தப்பட்​டது இத்​திட்​டம்.​ 
                   பின்​னர் இந்​தி​யா​வி​லும்,​​ 2003-க்குப் பின்​னர் தமி​ழ​கத்​தி​லும் இத்​திட்​டம் செயல்​ப​டுத்​தப்​ப​டு​கி​றது.​ ​பா​ரம்​ப​ரிய விவ​சா​யத்​தில் ஒரு கிலோ நெல் உற்​பத்தி செய்ய 3 ஆயி​ரம் லிட்​டர் தண்​ணீர் தேவைப்​ப​டு​கி​றது.​ வேலை ஆட்​க​ளும் அதி​கம் தேவை.​ ​உற் ​பத்​தி​யைப் பெருக்க,​​ இடு​பொ​ருள் செல​வு​க​ளைக் குறைக்க,​​ நீர்​தே​வை​யைக் குறைக்க,​​ களை​களை உர​மாக மாற்ற,​​ நுண்​ணு​யி​ரி​க​ளின் செயல்​பாட்டை அதி​க​ரிக்க,​​ தழைச்​சத்து தேவை​யைக் குறைக்க,​​ அனைத்​தும் மேலாக அதிக லாபம் அடைய செம்மை நெல் சாகு​ப​டித் திட்​டம் உத​வு​கி​றது.​ ​இத் ​திட்​டத்​தில் விதை நெல் அளவு,​​ ஏக்​க​ருக்கு 30 கிலோ​வில் இருந்து 3 கிலோ​வா​கக் குறை​கி​றது.​ ஏக்​க​ருக்கு நாற்​றங்​கால் ஒரு சென்ட் என்ற அள​வுக்​கும் நாற்​றுக்​க​ளின் வயது 30 நாளில் இருந்து 14 நாட்​க​ளா​க​வும் குறை​கி​றது.​ ​வ​ழக்​க​மான விதை​நேர்த்தி முறை​கள் பின்​பற்​றப் படு​கின்​றன.​ நடவு வய​லில் ஒரு குத்​துக்கு ஒரு நாற்று மட்​டுமே நடப்​ப​டு​கி​றது.​ 22.5 க்கு 22.5 செ.மீ.​ சது​ரத்​துக்கு ஒரு நாற்று நடப்​பட வேண்​டும்.​ இதற்​காக அள​வுச் சட்​டம் ஒன்றை வேளாண் துறையே வழங்​கு​கி​றது.​ ​இ​யந்​தி​ரம் மூல​மாகோ வேலை​ஆள்​க​ளைக் கொண்டோ நடவு செய்​ய​லாம்.​ கோனோ​வீ​டர் இயந்​தி​ரம் மூலம் களை​களை அகற்றி,​​ அங்​கேயே மடித்​துப்​போட்டு உர​மாக்​கும் உத்தி இதில் கையா​ளப்​ப​டு​கி​றது.​ ​நீர்​ம​றைய நீர் கட்டி,​​ பாசன நீர் அள​வைக் குறைக்க ஆலோ​சனை தெரி​விக்​கப்​ப​டு​கி​றது.​ குறிப்​பிட்ட பயி​ருக்கு,​​ பச்சை வண்ண அட்​டை​மூ​லம் தழைச் சத்து நிர்​ண​யிக்​கப்​ப​டு​கி​றது.​ நடப்​பட்ட ஒரு தூரில் இருந்து 60 முதல் 80 செடி​கள் வரை கிளைத்து அவற்​றில் கதிர்​கள் தோன்​று​வ​து​தான் இம்​முறை நெல் சாகு​ப​டி​யின் சிறப்பு அம்​சம்.​ ​கட​லூர் மாவட்​டத்​தில் நெல் உற்​பத்தி சரா​சரி அளவு,​​ ஏக்​க​ருக்கு 2800 கிலோ.​ தமி​ழ​கத்​தின் சரா​சரி நெல் உற்​பத்​தி​யும் அது​தான்.​ ஆனால் செம்​மை​நெல் சாகு​படி மூலம் ஏக்​க​ருக்கு 5 ஆயி​ரம் கிலோ நெல் உற்​பத்தி செய்ய முடி​யும் என்​கி​றார்​கள் வேளாண் அலு​வ​லர்​கள்.​ எனி​னும் இதன் இலக்கு ஏக்​க​ருக்கு 7 ஆயி​ரம் கிலோ என​வும் தெரி​விக்​கி​றார்​கள்.​ ​க​ டந்த 10 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக,​​ செம்மை நெல் சாகு​படி திட்​டம் விவ​சா​யி​க​ளி​டம் பெரு​ம​ள​வுக்​குப் பிர​சா​ரம் செய்​யப்​பட்டு வரு​கி​றது.​ வட்ட வாரி​யாக செயல்​முறை விளக்க வயல்​கள் அமைக்​கப்​ப​டு​கின்​றன.​ ​இத்​திட்​டத்​தைச் செயல்​ப​டுத்​தும் விவ​சா​யிக்கு,​​ ஏக்​க​ருக்கு ரூ.​ 2,700 மதிப்​புள்ள வேளாண் கரு​வி​க​ளும்,​​ ரூ.​ 700 மதிப்​புள்ள இடு​பொ​ருள்​க​ளும் இல​வ​ச​மாக வழங்​கப்​ப​டு​கி​றது.​ ஆனா​லும் இத்​திட்​டம் 35 முதல் 40 சத​வீத விவ​சா​யி​க​ளி​டம் மட்​டுமே சென்​ற​டைந்து இருப்​ப​தாக வேளாண் துறை அதி​கா​ரி​களே தெரி​விக்​கி​றார்​கள்.​ எனவே இத்​திட்​டம் மேலும் பல விவ​சா​யி​க​ளைச் சென்​ற​டைய வேண்​டும்.​
யோச​னை​கள்:​​  
திட்டம் குறித்து பாசி​முத்​தான் ஓடை விவ​சா​யி​கள் சங்​கத் தலை​வர் பி.ரவீந்​தி​ரன் தெரி​விக்​கும் ஆலோ​ச​னை​கள்:​ 
                  காவிரி டெல்டா பாச​னக் கடை​ம​டைப் பகு​தி​க​ளில் ஒற்றை நாற்​று​நடவு,​​ சற்று பின்​ன​டைவை ஏற்​ப​டுத்​து​கி​றது.​ 3 நாற்​று​கள் வரை நடு​கி​றோம்.​ கார​ணம் கடை​ம​டைப் பகு​தி​க​ளில் வயல்​க​ளில் தண்​ணீர் தேங்​கு​தைக் கட்​டு​படுத்த முடி​யாது.​ இத​னால் இயந்​தி​ரம் மூலம் நடவு சிர​ம​மா​கி​றது.​ மேலும் ஒற்றை நாற்று எளி​தில் வீணாகி விடு​கி​றது.​ ​​ நாற்று நடு​வோ​ரும் பாரம்​ப​ரிய முறை​யில்,​​ ஒப்​பந்த அடிப்​ப​டை​யில் நடவு செய்​வ​தால்,​​ அவ​சர அவ​ச​ர​மாக நடும்​போது நாற்​றுக்​க​ளின் வேர்ப்​ப​கு​தியை பெரும்​பா​லும் மடித்து நட்​டு​வி​டு​கி​றார்​கள்.​ இத​னால் முளைப்​புத் திறன் குறைந்து விடு​கி​றது.​ எனவே இத்​திட்​டத்​தில் விவ​சா​யி​க​ளுக்கு பயிற்சி அளிப்​பது போல் நாற்று நடும் பெண்​க​ளுக்​கும் சிறப்​புப் பயிற்சி அளிக்க வேண்​டும்.​ ​நி​தா​ன​மாக நாற்று நட்​டால்​தான் ஒற்றை நாற்று முறை வெற்​றி​பெ​றும்.​ எனவே நாற்று நடும் பணிக்​கான செல​வில் ஒரு பகு​தியை விவ​சா​யி​க​ளுக்கு மானி​ய​மாக அரசு வழங்​க​லாம்.​ காவிரி டெல்டா கடை​ம​டைப் பகு​தி​க​ளில் இத்​திட்​டம் வெற்றி பெற வடி​கால் வச​தியை மேம்​ப​டுத்த வேண்​டும் என்​றார் ரவீந்​தி​ரன்.​

Read more »

வியாழன், மார்ச் 04, 2010

நவரைப் பட்ட நெல் சாகுபடிக்கு ​ வேளாண்துறை ஆலோசனை

கடலூர்:

                    நவரைப் பட்ட நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கீழ்காணும் ஆலோசனைகளை கடலூர் மாவட்ட வேளாண்துறை புதன்கிழமை அறிவித்தது.​ ​ ​​ 

இதுதொடர்பாக வேளாண் இணை இயக்குநர் ச.இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:​ ​​

                    ​ கடலூர் மாவட்டத்தில் நவரைப்பட்ட நெல் உற்பத்தியைப் பெருக்கும் வகையில்,​​ தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் மானிய விலையில் சிங்க் சல்பேட் உரம் விவசாயிகளுக்கு வேளாண் துறைமூலம் வழங்கப்படுகிறது.​ ​ நவரைப் பட்ட நெல் பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 25 கிலோ சிங்க் சல்பேட் உரத்துடன்,​​ 50 கிலோ மணல் கலந்து,​​ ந ன்கு சமப்படுத்தப்பட்ட வயலில்,​​ நாற்று நடுமுன் ஒரே சீராக இடவேண்டும்.​​ ​ நவரைப் பட்ட நெல் சாகுபடி விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்துறை அலுவலர்களை அணுகி சிங்க் சல்பேட் உரத்தை மானிய விலையில் பெற்று பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior