உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 25, 2010

நெற்பயிரைத் தாக்கும் பாக்டீரியா இலைக்கீற்று நோய்


பாக்டீரியா இலைக்கீற்று நோய்த் தாக்குதலுக்கு உள்ளான நெற்பயிர் .
 

            தற்போது பயிரிடப்பட்டுள்ள பிபிடி 5204, ஏடிடி 39 போன்ற நெல் ரகங்களில் பாக்டீரியா இலைக் கீற்று நோய்த் தாக்குதல் அதிகளவில் உள்ளது.

               இத்தாக்குதலில் இருந்து பயிரைக் பாதுகாக்கும் முறை குறித்து திரூர் நெல் ஆராய்ச்சி நிலையத் தலைவர் கோ.வி.ராமசுப்பிரமணியம் தலைமையில், உதவிப் பேராசிரியர்கள்  விவசாயிகளுக்கு வழிமுறைகளை விளக்கி வருகின்றனர். 

பாக்டீரியா இலைக் கீற்று நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது குறித்து உதவிப் பேராசிரியர் சுமதி கூறும் போது, 

                "நெல் பயிரை இலைக் கீற்று நோய்த் தாக்கும் போது சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். உதாரணமாக ஆரம்ப நிலையில் இலையின் சிறு நரம்புகளுக்கிடையில் நீர்க்கசிவான கீற்றுக்கள் தோன்றி பின்னர் இலை செம்பழுப்பு நிறமாக மாறும். இலைக் கீற்றுகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இலைகள் முழுவதும் பரவி பின்னர் இலைகள் காய்ந்து விடும். இதுபோல் அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை கீழ்கண்ட முறைகளில் பாதுகாக்கலாம்

பாதுகாப்பு முறைகள்:  

                நோய் தோன்றியுள்ள வயல்களில் இருந்து மற்ற வயல்களுக்கு நீர் பாய்ச்சக் கூடாது. நோய் தாக்கிய பயிரில் இருந்து விதைகளை சேகரிக்கக் கூடாது. மண் பரிசோதனை செய்து அதன்படி தழைச்சத்து உரமிட வேண்டும். இந்நோயைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு கோசைட் 200 கிராம் அல்லது 18 கிராம் ஸ்ட்ரெப்டோ சைக்கிளின் அல்லது ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட்டுடன் 500 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு கலந்து நோயின் தீவிரத்துக்கு ஏற்ப ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தெளிக்க வேண்டும். இதுபோன்ற முறைகளை விவசாயிகள் கையாண்டால் நோயை கட்டுப்படுத்தி லாபமடையலாம்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior