கடலூர்:
நவரைப் பட்ட நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கீழ்காணும் ஆலோசனைகளை கடலூர் மாவட்ட வேளாண்துறை புதன்கிழமை அறிவித்தது.
இதுதொடர்பாக வேளாண் இணை இயக்குநர் ச.இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் நவரைப்பட்ட நெல் உற்பத்தியைப் பெருக்கும் வகையில், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் மானிய விலையில் சிங்க் சல்பேட் உரம் விவசாயிகளுக்கு வேளாண் துறைமூலம் வழங்கப்படுகிறது. நவரைப் பட்ட நெல் பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 25 கிலோ சிங்க் சல்பேட் உரத்துடன், 50 கிலோ மணல் கலந்து, ந ன்கு சமப்படுத்தப்பட்ட வயலில், நாற்று நடுமுன் ஒரே சீராக இடவேண்டும். நவரைப் பட்ட நெல் சாகுபடி விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்துறை அலுவலர்களை அணுகி சிங்க் சல்பேட் உரத்தை மானிய விலையில் பெற்று பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக