உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




மாற்றுத் திறனாளிகள் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றுத் திறனாளிகள் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, அக்டோபர் 15, 2010

கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி: தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

கடலூர்:

                மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்க தகுதி உள்ள தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்து உள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                    மாற்றுத் திறனாளிகளுக்கு தங்கும் விடுதியுடன் கூடிய தொழிற்பயிற்சி மையம் நடத்துவதற்கு, தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் தொண்டு நிறுவனங்களின் பயிற்சி மையத்தில் 25 மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு, உறைவிடம், பயிற்சி இலவசமாக அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் தொண்டு நிறுவனங்கள், ஊனமுற்றோர் சட்டம் 1995 பிரிவு 52ன் கீழ் புதுப்பிக்கப்பட்டு இருக்க வேண்டும். 

                   பயிற்சியில் சேரும் மாற்றுத் திறனாளிகள் 16 முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்களாக இருப்பர். தகுதி உள்ள தொண்டு நிறுவனங்கள் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

வியாழன், செப்டம்பர் 30, 2010

கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகள் வழங்க 45 லட்சம் ஒதுக்கீடு

கடலூர்:

                 கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகள், உபகரணங்கள் வழங்க 9 சட்டப் பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, தலா  5 லட்சம் வீதம்  45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

கடலூர் மாவட் ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

               இத் திட்டத்தில் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள், கை தாங்கிகள், முடநீக்கியல் சாதனங்கள், செயற்கை உறுப்புகள், கருப்புக் கண்ணாடிகள், ஊன்றுகோல்கள், பிரெய்லி கடிகாரங்கள், எலக்ட்ரானிக் பேசும் கைக் கடிகாரங்கள், காதொலிக் கருவிகள், ரீசார்ஜ் பேட்டரிகள் ஆகியன வழங்கப்பட உள்ளன. பாட்டரியால் இயங்கும் மோட்டார் பொருத்திய 3 சக்கர வாகனங்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் இத்திட்டத்தில் வழங்கப்பட மாட்டாது. 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி போன்றவற்றை 3 ஆண்டுகளுக்கு முன் பெற்றவர்கள் மட்டுமே தற்போது விண்ணப்பிக்கலாம். 

                    இதில் மாற்றுத்திறனாளிகள் இடைத்தரகர்களை அணுகாமல், உரிய அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட உதவிகளைப் பெறுவதற்கு 1-4-2010-க்குள்  விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள், 

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், 
37, ராமதாஸ் தெரு, 
புதுப்பாளையம், 
கடலூர்- 1 

                     என்ற முகவரிக்கு அல்லது, சட்டப்பேரவை தொகுதி அலுவலகத்துக்குக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ 30-9-2010-க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ரேஷன் கார்டு நகல்கள் இணைக்கப்பட வேண்டும் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

திங்கள், ஜூலை 26, 2010

மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டம்: முதல்வருக்கு நன்றி தெரிவிக்க சைக்கிள் பயணம்

கடலூர்:

         மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்க, தொழிலாளி விஜயகுமார் (36) சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் ஞாயிற்றுக்கிழமை கடலூர் வந்தார்.

             கும்பகோணத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். அங்குள்ள மளிகைக் கடையில் பொருள்களைக் கையாளும் தொழிலாளியாகப் பணிபுரிகிறார். தி.மு.க. தொண்டரான அவர், பிறவியிலேயே வலதுகால் ஊனமுற்றவர். எனினும் நன்றாக சைக்கிள் ஓட்டுவார். அவர் முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் மாற்றுத் திறனாளிகள் நலத்திட்டத்தால் ஈர்க்கப்பட்டு உள்ளார்.

             எனவே முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கும்பகோணத்தில் இருந்து சென்னை தலைமைச் செயலகத்துக்கு சைக்கிள் பயணம் தொடங்கி இருக்கிறார். கடந்த 23-ம் தேதி தனது சைக்கிள் பயணத்தைத் தொடங்கிய விஜயகுமார், எப்போது சென்னை சென்றடைவார் என்று கூறமுடியவில்லை.எனினும் சென்னை தலைமைச் செயலகம் சென்று முதல்வரை சந்திப்பேன் என்று உறுதியாகத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியது:

           மாற்றுத் திறனாளிகள் திட்டத்தால் ஊனமுற்ற பலர் நல்ல பயன் அடைந்து இருக்கிறார்கள். அதற்காக நான் சைக்கிளில் பிரசாரப் பயணம் மேற்கொண்டு இருக்கிறேன். பகலில் மட்டும் சைக்கிளில் பயணிக்கிறேன். இரவில் ஆங்காங்கே உள்ள திமுக அலுவலகங்களிலும் திமுக தொண்டர்கள் தயவிலும் தங்கிக் கொள்வேன். எனக்கு மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர் என்றார். திமுக தொண்டர்கள் பலர் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓராண்டில் ரூ.209 கோடி உதவி

கடலூர்:

            கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 2009-10-ம் ஆண்டில் மட்டும், ரூ.209.29 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் சனிக்கிழமை தெரிவித்தார்.

          மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், கடலூரில் சனிக்கிழமை நடந்தது. மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் அவினாசி எஸ்.இ.எம். கார்மெண்ட் நிறுவனம் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

முகாமைத் தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பேசியது:

             முகாமில் 400-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களில் வேலை செய்ய விருப்பம் தெரிவித்த 50-க்கும் மேற்பட்டோர் வேலைக்குத் தேர்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு மாத ஊதியம் ஆண்களுக்கு ரூ.4,500-ம் பெண்களுக்கு ரூ.3,250 வழங்கப்படும். உணவுக்காக ஆண்களிடம் ரூ.800-ம் பெண்களிடம் ரூ.600-ம் பிடித்தம் செய்யப்படும். தங்கும் இடம் இலவசம். தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு வரும் வாரத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பணி ஆணை வழங்குவார்.

          கடந்த ஓராண்டில் மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. வாரம்தோறும் நடைபெறும் மக்கள் குறைகேட்கும் கூட்டங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனிப்பிரிவு, தனி வழி அமைத்து, அவர்களின் கோரிக்கைகளுக்கு ஒரு வாரத்தில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 362 பேருக்கு வயது வரம்பை தளர்த்தி உதவித் தொகைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் புதிய திட்டத்தில் 1541 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. ஓராண்டில் 3,985 பேருக்கு ரூ.12.06 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் மற்றும் ரூ.1.74 கோடி நிதி உதவி, தனிநபர் பொருளாதார நிதி உதவியாக ரூ.1.86 கோடி வழங்கப்பட்டது. 29,215 பேருக்கு தேசிய அடையாள அட்டையும், மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் 9,812 பேருக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. தேசிய அறக்கட்டளை மூலம் 434 நபர்களுக்கு ரூ.10.45 கோடி மதிப்பில் மருத்துவக்காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டு உள்ளது. 

             மேலும் பல உதவிகள் செய்யப்பட்டு உள்ளன. மொத்தத்தில் கடந்த  ஓராண்டில் ரூ. 209.29 கோடிக்கான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளன. ÷நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், எஸ்.இ.எம். கார்மெண்ட் நிறுவன மேலாளர் யோகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

திங்கள், ஜூன் 28, 2010

மாற்றுத்திறனாளிகள் சங்கம் முதல்வருக்கு வாழ்த்து

திட்டக்குடி: 

              கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்திய முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக் கப்பட்டது

.இது குறித்து கடலூர் மாவட்ட உடல் மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர் முனுசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

                  கோவையில் உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டினை நடத்திய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். துணை முதல்வர் ஸ்டாலின், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் சிதம்பரநாதன், பொதுச் செயலாளர் சிம்மசந்திரன் உட்பட மாநில நிர்வாகிகள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக இரவு, பகலாக உழைத்து வரும் கலெக்டர் சீத்தாராமன் ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறோம்.மேலும், இன்று (28ம் தேதி) காலை 10 மணிக்கு கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட உள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior