உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 30, 2010

கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகள் வழங்க 45 லட்சம் ஒதுக்கீடு

கடலூர்:

                 கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகள், உபகரணங்கள் வழங்க 9 சட்டப் பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, தலா  5 லட்சம் வீதம்  45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

கடலூர் மாவட் ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

               இத் திட்டத்தில் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள், கை தாங்கிகள், முடநீக்கியல் சாதனங்கள், செயற்கை உறுப்புகள், கருப்புக் கண்ணாடிகள், ஊன்றுகோல்கள், பிரெய்லி கடிகாரங்கள், எலக்ட்ரானிக் பேசும் கைக் கடிகாரங்கள், காதொலிக் கருவிகள், ரீசார்ஜ் பேட்டரிகள் ஆகியன வழங்கப்பட உள்ளன. பாட்டரியால் இயங்கும் மோட்டார் பொருத்திய 3 சக்கர வாகனங்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் இத்திட்டத்தில் வழங்கப்பட மாட்டாது. 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி போன்றவற்றை 3 ஆண்டுகளுக்கு முன் பெற்றவர்கள் மட்டுமே தற்போது விண்ணப்பிக்கலாம். 

                    இதில் மாற்றுத்திறனாளிகள் இடைத்தரகர்களை அணுகாமல், உரிய அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட உதவிகளைப் பெறுவதற்கு 1-4-2010-க்குள்  விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள், 

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், 
37, ராமதாஸ் தெரு, 
புதுப்பாளையம், 
கடலூர்- 1 

                     என்ற முகவரிக்கு அல்லது, சட்டப்பேரவை தொகுதி அலுவலகத்துக்குக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ 30-9-2010-க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ரேஷன் கார்டு நகல்கள் இணைக்கப்பட வேண்டும் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior