உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ராணி சீதை ஆச்சி பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராணி சீதை ஆச்சி பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், அக்டோபர் 14, 2010

சிதம்பரம் ராணி சீதை ஆச்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சிதம்பரம் : 

              சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

                   அண்ணாமலைப் பல்கலைக் கழக தாவரவியல் துறைத் தலைவர் ஆறுமுகம் கண்காட்சியைத் துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் தர்பாரண்யன் தலைமை தாங்கினார். கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை மாணவ,மாணவிகள் காட்சிப் பொருளாக வைத்திருந்தனர். சிறப்பான காட்சிப் பொருளாக மூன்று கண்டுபிடிப்புகள் தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Read more »

சனி, ஜூலை 03, 2010

சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி


சிதம்பரம்:
 
              சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் 6,7,8ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஆர்.தர்பாரண்யன் பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக யோகா ஆய்வு மைய ஆசிரியை டி.சுடர்விழி மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி அளித்தார். உடற்கல்வி இயக்குநர் எஸ்.பிரபாகர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் வி.முருகையன் நன்றி கூறினார்.

Read more »

வெள்ளி, ஜூன் 25, 2010

சிதம்பரம் ராணி சீதை ஆச்சி பள்ளிக்குழு செயலருக்கு பாராட்டு விழா

சிதம்பரம், : 

                அண்ணாமலை நகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்து கொடுத்தமைக்காக பள்ளிக் குழு செயலருக்கு பாராட்டு விழா நடந்தது.

                    அண்ணாமலை நகர் ராணி சீதை ஆச்சி பள்ளிக் குழு செயலர் மற்றும் அண்ணாமலை பல்கலை பதிவாளர் ரத்தினசபாபதி, இவர் பள்ளியில் வகுப்பறைகள், தனித்தனியே ஆய்வக கூடங்கள், விளையாட்டு மைதானம் சுற்றுச் சுவர் மற்றும் நடைபாதை அமைத்து கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்துள்ளார். இதற்காக அலுவலர் கழகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.தலைமை ஆசிரியர் தர்பாரண்யன் தலைமை தாங்கி னார். அலுவலர் கழக செயலர் அன்புராஜா, உதவி தலைமை ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 88 சதவீதம் தேர்ச்சி பெற்றமைக்காக ஆசிரியர்கள், அலுவலர்களை பாராட்டி ரத்தினசபாபதி நினைவு பரிசு வழங்கினார்.

Read more »

சனி, மார்ச் 06, 2010

.தேசிய அறிவியல் தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

சிதம்பரம் :  

                     தேசிய அறிவியல் தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் பாராட்டி பரிசு வழங்கினார். தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பரங்கிப் பேட்டை கடல் வாழ் உயிரியல் உயராய்வு மையத்தின் சார்பில் பல்வேறுப் போட்டிகள்  நடத்தப் பட்டது. இதில் அண்ணாமலைநகர் ராணி சீதையாச்சி மேல்நிலைப் பள்ளி  8ம் வகுப்பு மாணவி நசிரின் பானு கண்காட்சியிலும்,  பிளஸ் 1 மாணவர் பிரவின் ஓவியப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றனர்.மாணவர்களை போட்டியில் பங்கேற்க  ஊக்கப் படுத்திய ஆசிரியர்கள் ஷாஜாதீபி, சரவணன், ஜோசபின் தேவ கிருமை, பியர்லின் வில்லியம்ஸ், சசிகலாதேவி ஆகியோர் களை அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந் தர் ராமநாதன், பதிவாளர் ரத்தினசபாபதி, பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரியல் உயராய்வு மைய இயக்குனர் பாலசுப்ரமணியன், பள்ளி தலைமை ஆசிரியர் தர்பாரண்யன் பாராட்டி பரிசுகள் வழங்கினர். கண்காட்சியில் எடைமேடைக்கு செல்லாமல் லாரியில் உள்ள எடையை கண்டறியும் முறை குறித்து மாணவி நசிரின் பானு வடிவமைத்திருந்த படைப்பு பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

Read more »

சனி, பிப்ரவரி 20, 2010

காசநோய், எய்ட்ஸ் நோய் தடுப்பிற்கு பள்ளி மாணவர்கள் 2.29லட்சம் நிதி


சிதம்பரம் : 

                            சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் காசநோய் மற்றும் எய்ட்ஸ் நோய் தடுப்பிற்காக 2லட்சத்து 29 ஆயிரம் நிதி திரட்டி வழங்கியுள்ளனர். காசநோய், எய்ட்ஸ், தொழுநோய், புற்றுநோய், பார்வையின்மை ஆகியவற்றால் பாதித்தவர்களுக்கு  சேவை செய்யும் வகையில் "இந்தியன் டெவலப்மெண்ட் பவுன்டேஷன்' என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. மும்பையை தலைமை இடமாக கொண்டு தேசிய அளவில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்தியா முழுவதும் 17 மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்த நிறுவனத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி பள்ளி மாணவர்கள் நிதி திரட்டி வழங்கி வருகின்றனர்.
 
                         இந்த ஆண்டு மாணவ, மாணவிகள் 2 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி அளித்தனர். எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஷைலோ ஜெர்சிபிரான்சிஸ்கா மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி வழங்கினார். கடந்த ஆண்டு இதே மாணவி 2 லட்சம் வழங் கினார். இந்த நிதி நேற்று தொண்டு நிறுவன தென் மண்டல மேலாளர் சிதம்பரம் என்பவரிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தர்பாரண்யன் வரவேற்றார். அண்ணாமலை பல்கலை பதிவாளர் ரத்தினபாபதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரவிச்சந் திரன் பங்கேற்றனர்.  அதிக நிதி திரட்டி தந்த மாணவி ஷைலோ ஜெர்சி பிராசிஸ்காவை முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பதிவாளர், தலைமை ஆசிரியர் பாராட்டினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior