சிதம்பரம் :
தேசிய அறிவியல் தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் பாராட்டி பரிசு வழங்கினார். தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பரங்கிப் பேட்டை கடல் வாழ் உயிரியல் உயராய்வு மையத்தின் சார்பில் பல்வேறுப் போட்டிகள் நடத்தப் பட்டது. இதில் அண்ணாமலைநகர் ராணி சீதையாச்சி மேல்நிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவி நசிரின் பானு கண்காட்சியிலும், பிளஸ் 1 மாணவர் பிரவின் ஓவியப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றனர்.மாணவர்களை போட்டியில் பங்கேற்க ஊக்கப் படுத்திய ஆசிரியர்கள் ஷாஜாதீபி, சரவணன், ஜோசபின் தேவ கிருமை, பியர்லின் வில்லியம்ஸ், சசிகலாதேவி ஆகியோர் களை அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந் தர் ராமநாதன், பதிவாளர் ரத்தினசபாபதி, பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரியல் உயராய்வு மைய இயக்குனர் பாலசுப்ரமணியன், பள்ளி தலைமை ஆசிரியர் தர்பாரண்யன் பாராட்டி பரிசுகள் வழங்கினர். கண்காட்சியில் எடைமேடைக்கு செல்லாமல் லாரியில் உள்ள எடையை கண்டறியும் முறை குறித்து மாணவி நசிரின் பானு வடிவமைத்திருந்த படைப்பு பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக