சிதம்பரம் :
சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் காசநோய் மற்றும் எய்ட்ஸ் நோய் தடுப்பிற்காக 2லட்சத்து 29 ஆயிரம் நிதி திரட்டி வழங்கியுள்ளனர். காசநோய், எய்ட்ஸ், தொழுநோய், புற்றுநோய், பார்வையின்மை ஆகியவற்றால் பாதித்தவர்களுக்கு சேவை செய்யும் வகையில் "இந்தியன் டெவலப்மெண்ட் பவுன்டேஷன்' என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. மும்பையை தலைமை இடமாக கொண்டு தேசிய அளவில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்தியா முழுவதும் 17 மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்த நிறுவனத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி பள்ளி மாணவர்கள் நிதி திரட்டி வழங்கி வருகின்றனர்.
இந்த ஆண்டு மாணவ, மாணவிகள் 2 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி அளித்தனர். எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஷைலோ ஜெர்சிபிரான்சிஸ்கா மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி வழங்கினார். கடந்த ஆண்டு இதே மாணவி 2 லட்சம் வழங் கினார். இந்த நிதி நேற்று தொண்டு நிறுவன தென் மண்டல மேலாளர் சிதம்பரம் என்பவரிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தர்பாரண்யன் வரவேற்றார். அண்ணாமலை பல்கலை பதிவாளர் ரத்தினபாபதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரவிச்சந் திரன் பங்கேற்றனர். அதிக நிதி திரட்டி தந்த மாணவி ஷைலோ ஜெர்சி பிராசிஸ்காவை முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பதிவாளர், தலைமை ஆசிரியர் பாராட்டினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக