உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஸ்மார்ட் கார்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்மார்ட் கார்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, செப்டம்பர் 03, 2011

கடலூர் மாவட்டத்தில் 62 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித் தொகை பெற பயோ மெட்ரிக் ஸ்மார்ட் கார்டு

சிதம்பரம்:

            சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித் தொகை பெற மாவட்டத்தில் 62 ஆயிரம் பேருக்கு  வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி தெரிவித்தார்.

            இந்த முன்னோடி திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து காணொளி (வீ டியோ கான்ஃபரன்ஸ்) மூலம் தொடங்கி வைத்தார்.

அப்போது முதல்வர் பேசியது:

                 அரசின் முன்னோடி திட்டத்தை தொடங்கி வைப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அரசு வழங்குகிற இந்த ஓய்வூதியத் தொகையை பயனாளிகள் பெறுவதற்கு இதுவரை சிரமங்கள் இருந்துவந்தன. இந்த புதிய முன்னோடி திட்டத்தின் மூலம் சிரமங்கள் நீக்கப்பட்டு பயனாளிகள் வசிக்கும் கிராமத்துக்கே வங்கி சேவையாளர்கள் நேரில் சென்று உதவித் தொகையை வழங்குகிறார்கள். எனவே ஸ்மார்ட் கார்டு மூலம் இந்த வாரமே பயனாளிகளுக்கு உதவித் தொகை கிடைக்கும். சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு இந்த புதிய திட்டம் பயனளிக்கும், உதவியாக இருக்கும் என நம்புகிறேன் என ஜெயலலிதா தெரிவித்தார்.

காட்டுமன்னார்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி பேசியது: 

                  முன்னோடி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் மொத்தம் 161 கிராமங்களில் ஓய்வூதியம் பெறும் 10,530 பேர் பயன்பெறும் முன்னோடி திட்டமாகும்.  உடையார்குடி வங்கி மூலம் கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்த இருதயமேரி என்ற பயனாளிக்கு ஸ்மார்ட் கார்டு மூலம் பணம் பெறும் திட்டத்தை முதல்வர் அனுமதியின் பேரில் தொடங்கப்படுகிறது என வே.அமுதவல்லி தெரிவித்தார்.

               விழாவில் பயனாளி இருதயமேரி தெரிவிக்கையில் இதுவரை ரூ.500 உதவித்தொகை பெற்று வந்த எங்களுக்கு முதல்வர் ரூ. ஆயிரமாக உயர்த்தி வழங்கியுள்ளது மிகுந்த சந்தோஷமாக உள்ளது. மேலும் கிராமம், கிராமமாக வந்து கைரேகை மூலம் பணத்தை பெறுவதற்கு ஏற்பாடு செய்த முதல்வருக்கு நன்றி என்றார்.  இவ்விழாவில் காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகமாறன், கோட்டாட்சியர் எம்.இந்துமதி. வட்டாட்சியர் விஸ்வநாதன், சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சந்திரா மற்றும் வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

              கடலூர் மாவட்டத்தில் இந்த முன்னோடி திட்டத்தின்கீழ் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் மூலம் 62 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு மொத்தம் 10,530 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 




Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு

             மாணவர்களின் முழு விவரங்கள் பதிவுசெய்யப்பட்ட ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளிக்கும்போது அமைச்சர் சி.வி. சண்முகம் வெளியிட்ட அறிவிப்புகள்:  

         மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டில் ஒவ்வொரு மாணவரின் பெயர், முகவரி, பிறப்பு, பள்ளிச் சேர்க்கை, தேர்ச்சி, நடத்தை, பெற்றோர் பெயர், பெற்றோர் வருமானம் போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். இதன்மூலம் மாணவர்கள் குடும்பச் சூழ்நிலை காரணமாக இடம்பெயர நேரும்போது இதில் பதிவு செய்துள்ள விவரங்களின் அடிப்படையில் எந்தப் பள்ளியிலும் சேர முடியும்.  இதன் மூலம் மாணவர்களின் இடைநிற்றல் துல்லியமாகக் கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்க வழிவகை செய்யப்படும். 

 ஸ்மார்ட் வகுப்புகள்:

               முதல்கட்டமாக, 5 அரசுப் பள்ளிகளில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். வகுப்பறையில் கணினி முறையில் பாடம் நடத்தப்படும். இதயம் குறித்து பாடம் நடத்தும்போது, ஒலி, ஒளி அமைப்பில் வெண் திரையில் இதயம் தோன்றும். இதன்மூலம், பாடங்கள் மாணவர்கள் மனதில் நீண்ட நாள்கள் நிற்கும். 

ல்வித் தகவல் மேலாண்மை: 

            கல்வித் தகவல் மேலாண்மைத் திட்டத்தின் மூலம் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் அமைப்பு, அமைவிடம், கட்டட வசதி போன்றவை பதிவு செய்யப்படும். அந்தப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களின் பெயர், பணி, பணியில் சேர்ந்த நாள், வயது, ஓய்வு பெறும் நாள் போன்ற எல்லா விவரங்களும் முழுமையாகப் பதிவு செய்யப்படும்.  இந்த முறையில் பள்ளிக் கல்வித் துறையில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை, இடைநிற்றல், தேர்வுகள், தேர்ச்சி போன்றவை பதிவு செய்யப்படும். இதில் பள்ளியில் பயிலும் மாணவர் ஒவ்வொருவருக்கும் தர எண் அளிக்கப்பட்டு ஆண்டுதோறும் அந்த மாணவரின் நிலை கண்காணிக்கப்படும்.








Read more »

சனி, ஆகஸ்ட் 20, 2011

அடுத்த அண்டு முதல் ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டுகள்

             ""தற்போதுள்ள ரேஷன் கார்டுகளுக்குப் பதிலாக, 2012-13ம் ஆண்டில், மின்னணு ரேஷன் கார்டுகள் (ஸ்மார்ட் கார்டுகள்) வழங்கப்படும்'' என்று, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார் 

உணவு மற்றும் கூட்டுறவுத் துறைக்கான மானியத்தின் மீது, சட்டசபையில்  நடந்த விவாதம்:

கிருஷ்ணசாமி - புதிய தமிழகம் : 

               ஒருபக்கம் போலி ரேஷன் கார்டுகள் உள்ளன. மற்றொரு பக்கம், ஏராளமானோர், கார்டுகள் கிடைக்காமல் உள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். ரேஷன் கார்டுகள், சென்னையில் அச்சிட்டு வழங்கப்படுவதால், அவை கிடைக்க தாமதமாகிறது. இதற்குப் பதிலாக, அந்தந்த வட்டார அளவிலேயே ரேஷன் கார்டுகளை அச்சிட்டுக் கொடுக்க வேண்டும்.

அமைச்சர் புத்திசந்திரன்: 

               அனைத்து வட்ட வழங்கல் அலுவலக அளவில், ரேஷன் கார்டுகள் அச்சிடப்படுகின்றன.முதல்வர் ஜெயலலிதா: ரேஷன் கார்டுகள் பற்றி, உணவுத் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது நடப்பில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம், இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிய்டன் முடிகிறது.தற்போது குடும்ப அட்டைகள் வழங்கும் முறையில், ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயரைப் பதிவு செய்தால், அதைக் கண்டுபிடிக்க வழிவகை இல்லை.

              இதனால், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில், குடும்ப அட்டைகளில் ஒரே நபர் பெயர் இடம் பெறும் நிலைய்ம், போலி குடும்ப அட்டைகள் வழங்கப்படும் நிலைய்ம் உள்ளது. மேலும், நியாய விலைக் கடைகளுக்கு பொருள் பெற வராத குடும்ப அட்டைகளுக்கும், கடைப் பணியாளர்கள் போலி பட்டியலிடும் நிலை உள்ளது.இப்பிரச்னையைக் களைய, தற்போது நடப்பிலுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, உடற்கூறு பதிவு முறையில், மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தொகுப்பில், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கும் முறை உள்ளதால், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளில் பதிவு செய்ய்ம் நிலை மற்றும் போலி குடும்ப அட்டைகள் வழங்குதல் போன்றவை களையப்படும்.மேலும், ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் பெற வரும் குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே பட்டியலிட முடிய்ம். போலி பட்டியலிடுவது களையப்படும். எனவே, தற்போது நடப்பிலுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வரும் 2012-13ம் ஆண்டில் வழங்க உத்தேசிக்கப்பட்டுள் ளது. 








Read more »

வெள்ளி, அக்டோபர் 29, 2010

ஆன்-லைனில் மருத்துவப் புத்தகங்கள்: சென்னையில் அறிமுகம்


 
 
                 மருத்துவ மாணவர்கள், டாக்டர்கள் ஆகியோர் கம்ப்யூட்டரில் மருத்துவ புத்தகங்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த தகவல்களை அறியும் முறை சென்னை அரசு மருத்துவக் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  
 
                   எந்தவித பதிவுக் கட்டணமும் இன்றி "அபாட் ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட்' அறிமுகப்படுத்தியுள்ள "நாலட்ஜ் ஜெனி' என்ற இந்த ஆன்லைன் முறையை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்வி இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) டாக்டர் வி. கனகசபை வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். 
 
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்வி இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) டாக்டர் வி. கனகசபை கூறியது:- 
 
                          ""எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ்-எம்சிஎச் (உயர் சிறப்பு மருத்துவம்) படிப்போருக்கும் டாக்டர்களுக்கும் இந்த ஆன் லைன் முறை மிகவும் உதவியாக இருக்கும்.  இந்த ஆன் லைன் முறையில் 3000 மருத்துவ ஆராய்ச்சி இதழ்கள், 50 இ-புத்தகங்கள், அமெரிக்க மருத்துவக் கல்லூரிகளின் 11 சிறப்பு மருத்துவத் துறைகள் மூலம் 2,000 பக்கங்களுக்கு மேல் உள்ள மருத்துவத் தகவல்கள், அண்மைக்கால மருத்துவ முன்னேற்றங்கள், மருத்துவ புகைப்படங்கள் உள்ளிட்டவற்றைப் பார்த்து பலன் அடைய முடியும்.  
 
இரண்டு கல்லூரிகளில்...:
 
                           இந்த ஆன் லைன் முறை முதல் கட்டமாக சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த ஆன் லைன் முறை திட்டத்தின்படி எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ். என படிப்புகளின் துறைகளுக்கு ஏற்ப எட்டு ஸ்மார்ட் கார்டுகளும் பொதுவான ரகசியக் குறியீடும் வழங்கப்படும்.  ஸ்மார்ட் கார்டு, பொதுவான ரகசியக் குறியீட்டைப் பயன்படுத்தி சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி இரண்டிலும் மொத்தம் 3,500 மருத்துவ மாணவர்களும் டாக்டர்களும் பலன் அடைவார்கள்.  இந்தத் திட்டம் படிப்படியாக மீதமுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் அறிமுகப்படுத்தப்படும்'' என்றார் டாக்டர் வி. கனகசபை.

Read more »

ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

கடலூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு 1.37 கோடியில் சொந்தக் கட்டடம்

கடலூர்:

                         கடலூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு  1.37 கோடியில் சொந்தக் கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா இம்மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. கடலூரில் பல்வேறு இடங்களில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு, சொந்தக் கட்டடம், கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறைச் சாலை அருகே, விசாலமான இடத்தில் கட்டப்பட்டு உள்ளது.

                       இதன் தரைத் தளத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் அறை, அலுவலகம், மற்றும் பணம் செலுத்தும் கெüண்டர்கள் அமைந்து இருக்கும். முதல் தளத்தில் கூட்ட அரங்கம், மற்றும் ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பகுதி அமைந்திருக்கும் வகையில் கட்டப்பட்டு உள்ளது.அலுவலகத்தின் அருகே வாகனங்களை இயக்கிக் காண்பிக்கும் மைதானம்,  40 லட்சத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்டு இருக்கும் போக்குவரத்து பயிற்சி பூங்கா ஆகியவை அமைந்துள்ளன.இம்மாத இறுதியில் இக்கட்டடம் திறக்கப்பட இருப்பதை முன்னிட்டு, வியாழக்கிழமை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மனோகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Read more »

வெள்ளி, ஏப்ரல் 30, 2010

தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு மூலம் ஓட்டுநர் உரிமம்: அமைச்சர் கே.என். நேரு




               ஸ்மார்ட் கார்டு முறை மூலம், வாகன உரிமம், வாகன பதிவுச் சான்று    (ஆர்.சி.) வழங்கும் நடைமுறை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு கூறினார். 

                   இந்த ஸ்மார்ட் கார்டு முறை சோதனை அடிப்படையில் கடலூர், சிவகங்கை மற்றும் சென்னை தெற்கு ஆகிய இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று இடங்களில் இந்தத் திட்டம் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இதை விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த முறை அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் உடனடியாக அமலுக்கு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசும் போது, இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

இது குறித்து மைச்சர் கே.என்.நேரு மேலும் கூறியது:  

              வாகனங்களுக்கான பதிவுச் சான்று (ஆர்.சி.) புத்தக வடிவில் பெரிதாக வழங்கப்பட்டு வந்தது. இதைப் பாதுகாத்து வைப்பதில் சிரமமாக இருந்தது. இதைத் தொடர்ந்து, பதிவுச் சான்று, சான்றிதழ் வடிவில் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சான்றிதழ் வடிவமும் பெரிதாக இருப்பதால், பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஸ்மார்ட் கார்டு என்ற பெயரில் சிறிய அட்டை வடிவில், ஒரு புறம் புகைப்படத்துடன் கூடிய ஓட்டுநர் உரிமமும், மறுபுறம் வாகனப் பதிவுச் சான்றும் பதிவு செய்து அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. என்னென்ன இருக்கும்? இந்த அட்டையில் "மைக்ரோ சிப்' ஒன்றும் பொருத்தப்பட்டு இருக்கும். இந்தச் "சிப்' தான் வாகன உரிமையாளரின் ஜாதகம் அனைத்தையும் தெரிவிக்கும். அதில் வாகன உரிமையாளரின் பெயர், முகவரி, வாகனம் எப்போது வாங்கப்பட்டது, உரிமத்தை புதுப்பிக்கும் தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும். ஸ்மார்ட் கார்டில் உள்ள விவரங்களை தெரிந்து கொள்ளக் கூடிய கையடக்கக் கருவிகளை வாகனத் தணிக்கை அதிகாரிகள் வைத்திருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior