கடலூர்:
கடலூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு 1.37 கோடியில் சொந்தக் கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா இம்மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. கடலூரில் பல்வேறு இடங்களில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு, சொந்தக் கட்டடம், கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறைச் சாலை அருகே, விசாலமான இடத்தில் கட்டப்பட்டு உள்ளது.
இதன் தரைத் தளத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் அறை, அலுவலகம், மற்றும் பணம் செலுத்தும் கெüண்டர்கள் அமைந்து இருக்கும். முதல் தளத்தில் கூட்ட அரங்கம், மற்றும் ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பகுதி அமைந்திருக்கும் வகையில் கட்டப்பட்டு உள்ளது.அலுவலகத்தின் அருகே வாகனங்களை இயக்கிக் காண்பிக்கும் மைதானம், 40 லட்சத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்டு இருக்கும் போக்குவரத்து பயிற்சி பூங்கா ஆகியவை அமைந்துள்ளன.இம்மாத இறுதியில் இக்கட்டடம் திறக்கப்பட இருப்பதை முன்னிட்டு, வியாழக்கிழமை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மனோகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக