மருத்துவ மாணவர்கள், டாக்டர்கள் ஆகியோர் கம்ப்யூட்டரில் மருத்துவ புத்தகங்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த தகவல்களை அறியும் முறை சென்னை அரசு மருத்துவக் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எந்தவித பதிவுக் கட்டணமும் இன்றி "அபாட் ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட்' அறிமுகப்படுத்தியுள்ள "நாலட்ஜ் ஜெனி' என்ற இந்த ஆன்லைன் முறையை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்வி இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) டாக்டர் வி. கனகசபை வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்வி இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) டாக்டர் வி. கனகசபை கூறியது:-
""எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ்-எம்சிஎச் (உயர் சிறப்பு மருத்துவம்) படிப்போருக்கும் டாக்டர்களுக்கும் இந்த ஆன் லைன் முறை மிகவும் உதவியாக இருக்கும். இந்த ஆன் லைன் முறையில் 3000 மருத்துவ ஆராய்ச்சி இதழ்கள், 50 இ-புத்தகங்கள், அமெரிக்க மருத்துவக் கல்லூரிகளின் 11 சிறப்பு மருத்துவத் துறைகள் மூலம் 2,000 பக்கங்களுக்கு மேல் உள்ள மருத்துவத் தகவல்கள், அண்மைக்கால மருத்துவ முன்னேற்றங்கள், மருத்துவ புகைப்படங்கள் உள்ளிட்டவற்றைப் பார்த்து பலன் அடைய முடியும்.
இரண்டு கல்லூரிகளில்...:
இந்த ஆன் லைன் முறை முதல் கட்டமாக சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆன் லைன் முறை திட்டத்தின்படி எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ். என படிப்புகளின் துறைகளுக்கு ஏற்ப எட்டு ஸ்மார்ட் கார்டுகளும் பொதுவான ரகசியக் குறியீடும் வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டு, பொதுவான ரகசியக் குறியீட்டைப் பயன்படுத்தி சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி இரண்டிலும் மொத்தம் 3,500 மருத்துவ மாணவர்களும் டாக்டர்களும் பலன் அடைவார்கள். இந்தத் திட்டம் படிப்படியாக மீதமுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் அறிமுகப்படுத்தப்படும்'' என்றார் டாக்டர் வி. கனகசபை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக