உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு

             மாணவர்களின் முழு விவரங்கள் பதிவுசெய்யப்பட்ட ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளிக்கும்போது அமைச்சர் சி.வி. சண்முகம் வெளியிட்ட அறிவிப்புகள்:  

         மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டில் ஒவ்வொரு மாணவரின் பெயர், முகவரி, பிறப்பு, பள்ளிச் சேர்க்கை, தேர்ச்சி, நடத்தை, பெற்றோர் பெயர், பெற்றோர் வருமானம் போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். இதன்மூலம் மாணவர்கள் குடும்பச் சூழ்நிலை காரணமாக இடம்பெயர நேரும்போது இதில் பதிவு செய்துள்ள விவரங்களின் அடிப்படையில் எந்தப் பள்ளியிலும் சேர முடியும்.  இதன் மூலம் மாணவர்களின் இடைநிற்றல் துல்லியமாகக் கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்க வழிவகை செய்யப்படும். 

 ஸ்மார்ட் வகுப்புகள்:

               முதல்கட்டமாக, 5 அரசுப் பள்ளிகளில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். வகுப்பறையில் கணினி முறையில் பாடம் நடத்தப்படும். இதயம் குறித்து பாடம் நடத்தும்போது, ஒலி, ஒளி அமைப்பில் வெண் திரையில் இதயம் தோன்றும். இதன்மூலம், பாடங்கள் மாணவர்கள் மனதில் நீண்ட நாள்கள் நிற்கும். 

ல்வித் தகவல் மேலாண்மை: 

            கல்வித் தகவல் மேலாண்மைத் திட்டத்தின் மூலம் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் அமைப்பு, அமைவிடம், கட்டட வசதி போன்றவை பதிவு செய்யப்படும். அந்தப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களின் பெயர், பணி, பணியில் சேர்ந்த நாள், வயது, ஓய்வு பெறும் நாள் போன்ற எல்லா விவரங்களும் முழுமையாகப் பதிவு செய்யப்படும்.  இந்த முறையில் பள்ளிக் கல்வித் துறையில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை, இடைநிற்றல், தேர்வுகள், தேர்ச்சி போன்றவை பதிவு செய்யப்படும். இதில் பள்ளியில் பயிலும் மாணவர் ஒவ்வொருவருக்கும் தர எண் அளிக்கப்பட்டு ஆண்டுதோறும் அந்த மாணவரின் நிலை கண்காணிக்கப்படும்.
0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior