உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 04, 2009

அதிகரித்து வரும் சோரியாசிஸ் நோய்

கடலூர், அக். 31:

இந்தியாவில் சோரியாசிஸ் நோய் அதிகரித்து வருவதாக, மருத்துவத் துறை முன்னாள் இயக்குநரும், கிழக்குக் கடற்கரை தோல் மருத்துவர்கள் சங்கத் தலைவருமான டாக்டர் சி. மகாலிங்கம் வேதனை தெரிவித்தார்.
உலக சோரியாசிஸ் தினத்தையொட்டி, கடலூரில் ரோட்டரி சங்கம் மற்றும் கிழக்குக் கடற்கரை தோல் மருத்துவர்கள் சங்கம் சார்பில், இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
சோரியாஸிஸ் வித்தியாசமான தோல் நோய். மேலை நாடுகளில், குறிப்பாகக் குளிர் பிரதேசங்களில் இந் நோய் அதிகம் காணப்படுகிறது. நம் நாட்டில் குளிர் பிரதேசங்களில் மட்டுமன்றி, சூரிய ஒளி கிடைக்கும் பகுதிகளிலும் காணப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் 1 சதவீதமாக இருந்த சோரியாசிஸ் நோய் தற்போது 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோல் வியாதிகள் உள்ளன. இவற்றில் 500 வியாதிகளுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது.
ஆனால், மற்ற தோல் வியாதிகளைப் போல், சோரியாசிஸ் தொற்று நோய் அல்ல.
கெட்ட நடத்தைகளால் வருவதும் அல்ல. சோரியாசிஸ் நோயின் காரணத்தை அறுதியிட்டுக் கூற முடியாததாலும், திட்டவட்டமான ஒரே சிகிச்சை முறை இல்லாததாலும், பலவிதமான விளம்பரங்களைச் செய்து மக்களை பலர் ஏமாற்றி வருகின்றனர்.
எனவே, மக்களிடையே இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், முறையாகப் பயின்ற தோல் மருத்துவர் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும் என்றார் அவர்.
மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார், சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர். மீரா, இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் சந்திரன், ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் கோவிந்தராஜ், மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் நவரத்தனம் உள்ளிட்டோர் பேசினர்.
ஆதிபராசக்தி கல்வி அறக்கட்டளை மருத்துவ ஆலோசகர் மதீந்திரன் நன்றி கூறினார்.

2 கருத்துகள்:

  • தமிழ் பொண்ணு says:
    16 நவம்பர், 2010 அன்று PM 7:21

    நண்பரே சோரியாசிஸ் பாதித்த மக்களுக்கு கருத்துரைகளை எடுத்து சொல்லவும் விளம்பரம் செய்து ஏமாறுவதில் இருந்து தடுக்கவும் ஒரு சமுக தளம் ஒன்று ஆரம்பித்து உள்ளேன்.இதில் சோரியாசிஸ் குணம் ஆக சில மருந்துகளும் அதனை அவர்களே தயார் செய்வதை பற்றியும் பிரத்யோகமாக சொல்லி வருகிறேன்.முடிந்தால் என்னுடைய தளத்தினை தாங்கள் பார்க்கலாம்.
    இப்படிக்கு ,
    மதுரை பொண்ணு.

  • கடலூர் ரா.கார்த்திகேயன் says:
    4 டிசம்பர், 2010 அன்று PM 4:52

    http://cuddalore-news.blogspot.com/2010/12/blog-post_2108.html" வலைப்பூ அறிமுகம் - சோரியாசிஸ் நோய் பற்றிய தகவல்

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior