skip to main |
skip to sidebar
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் தொலைநோக்கி
சிதம்பரம்,நவ.16: பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் உள்ள பார்வையாளர்கள் டவரில் ரூ.4.10 லட்சம் மதிப்புள்ள தொலைநோக்கி கருவி வைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை கிள்ளை பேரூராட்சித் தலைவர் எஸ்.ரவிச்சந்திரன் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்கி வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் ஹரிஹரன், கவுன்சிலர்கள் சங்கர், பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுற்றுலாப் பயணிகளிடம் நபர் ஒருவருக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும். இத் தொலைநோக்கி மூலம் சுமார் 8 கி.மீ. தூரம் வரை உள்ள இயற்கை எழில் சூழ்ந்துள்ள பிச்சாவரம் வனக்காடுகளை பார்க்கலாம் என எஸ்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக