கடலூர்,நவ.16:
கடலூர் நகரில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் காலனிப் பகுதிகளில் வீடுகளைச் சுற்றி தேங்கிநிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச் செல்வன் மற்றும் கடலூர் நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அளித்த கோரிக்கை மனு:
தற்போது பெய்துவரும் கனமழையால் கடலூர் நகராட்சி 32-வது வார்டுக்கு உள்பட்ட குழந்தைக் காலனியில் 40 வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவது மிகவும் சிரமராக இருக்கிறது. வில்வராயநத்தம், கொடிக்கால் குப்பம், மணவெளி, ஆலைக்காலனி, புருகீஸ்பேட்டை, கோண்டூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளைச் சுற்றி மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.
தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேணடும் என்றும் மனுவில் கோரப்பட்டு உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக