கடலூர், நவ.17-
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் கடலூர் மாவட்டத்தில் வசித்து வரும் வறுமை கோட்டின் கீழ் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதி திராவிடர், கிறிஸ்துவர் ஆகியோர் தொழில் தொடங்கி பிழைக்கும் வகையில் இலவச தையல் எந்திரம் வேண்டுவோர் உடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், கடலூர் என்ற முகவரிக்கு வருமானச்சான்று (ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்துக்கு மிகாமல்) சாதிச்சான்று மற்றும் தையல் பயிற்சி பெற்ற நிறுவனத்தின் சான்றுடன் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்டவாறு 150 இலவச தையல் எந்திரங்கள் வாங்கி வழங்கிட உரிய ஒப்பந்த புள்ளி கோரப்படுகிறது. மேற்படி தொழில் கருவிகளுக்கான விலை பட்டியல் தையல் எந்திரம் ஒன்றுக்கு ரூ.2,500-க் குள்ளும், ஐ.எஸ்.ஐ. முத்திரையுடைய தரமான கம்பெனி தயாரிப்பாகவும் இருத்தல் வேண்டும். ஒப்பந்த புள்ளியை உறையிட்டு சீலிடப்பட்டு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், கடலூர்-1 என்ற முகவரிக்கு வருகிற 25-ந் தேதிக்குள் அனுப்பவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக