பண்ருட்டி, டிச. 10:
பண்ருட்டி நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட தனியாரிடமிருந்து நிலம் வாங்கப்பட உள்ளது. இதற்கான மதிப்பறிக்கை ஒரு வாரத்திற்குள் நகராட்சியிடம் அளிக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் புதன்கிழமை கூறினார். பண்ருட்டி விழமங்கலம் பகுதியில் வாந்தி-பேதி ஏற்பட்டதில் முதியவர் ரங்கநாதன் (65) செய்வாய்க்கிழமை இறந்தார். 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தக வல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் நோய் பாதித்த விழமங்கலம் பகுதியை புதன்கிழமை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து கெடில நதி, சுடுகாடு ஆகிய பகுதிகளில் குப்பை கொட்டப்படும் இடங்களை அவர் பார்வையிட்டார். நகராட்சி ஆணையர் கே.உமாமகேஸ்வரி உடனிருந்தார்.÷அப்போது அப்பகுதியில் வசிப்பவர்களும், வண்ணான் துறையில் துணி துவைத்துக் கொண்டிருந்தவர்களும், குப்பைகளில் இருந்து வரும் துர் நாற்றத்தால் பாதிக்கப்படுவதாக புகார் கூறினர்.
இதுகு றித்து நகராட்சி ஆணையர் கூறுகையில், ""பண்ருட்டியில் குப்பை கொண்ட இடம் இல்லை. நகரப் பகுதியில் உள்ள நகராட்சி இடத்தில் குப்பை கொட்டினால் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே சேமக்கோட்டையில் குப்பை கொட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தனியார் வசமுள்ள அந்த நிலத்தை நகராட்சி வாங்க இருக்கிறது. இந்த நிலத்திற்கான மதிப்பீடு அறிக்கை தயாரித்து அளிக்கும்படி வருவாய்த் துறையிடம் கோரியுள்ளோம்'' என்றார்.
அப்போது உடனிருந்த மாவட்ட வருவாய் அலுவலர், அந்த நிலத்துக்கான மதிப்பீடு அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் தயாரித்து, அனுப்பி வைக்கப்படும் என்றார். மேலும் அந்த இடத்தை வாங்குவதற்கான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளும்படி அவர் நகராட்சி ஆணையரிடம் கூறினார்.வட்டாட்சியர் ஆர்.பாபு, சுகாதார அலுவலர் பாலச்சந்திரன் ஆகியோரும் அப்போது உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக