உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 11, 2009

விருத்​தா​ச​லம் நகர தேவை​களை​ சட்​ட​மன்​றத்​தில் பேச ஆளில்லை

நெய்வேலி, ​​ டிச.​ 10:​ 

                       விருத்​தா​ச​லம் நகர வளர்ச்​சிப் பணி​கள் மற்​றும் தேவை​கள் குறித்து தமி​ழக சட்​டப்​பே​ர​வை​யில் பேச ஆளில்லை என்​றார் நகர்​மன்​றத் தலை​வர் வி.கே.​ முரு​கன்.​ இத​னால் பல்​வேறு பணி​கள் தடை​பட்​டி​ருப்​ப​தா​க​வும் கவலை தெரி​வித்​தார்.​

                    இ​து​கு​றித்து அவர் மேலும் கூறி​யது:​ எங்​க​ளைப் பொருத்​த​மட்​டில் கடந்த 3 ஆண்​டு​க​ளில் ரூ.16 கோடி மதிப்​பீட்​டி​லான வளர்ச்​சிப் பணி​கள் நடை​பெற்​றுள்​ளன.​ இம்​மா​தம் 11-ம் தேதி நடை​பெற உள்ள நகர்​மன்​றக் கூட்​டத்​தில் மேலும் ரூ.3 கோடி மதிப்​பீட்​டி​லான வளர்ச்​சிப் பணி​க​ளுக்கு திட்​டங்​கள் தயார் செய்​யப்​பட்டு,​​ அவை ஒப்​பு​தல் பெறப்​பட உள்​ளன.​

               தெரு விளக்​கு​கள் பரா​ம​ரித்​தல் பணியை தனி​யாரை விட முடி​வு​செய்து அதற்​கான ஒப்​பந்​த​தா​ர​ரும் நிய​மிக்​கப்​பட உள்​ள​னர்.​ இதே​போன்று நக​ரில் குவி​யும் குப்​பை​களை மக்​கும்,​​ மக்​காத குப்​பை​கள் எனத் தரம் பிரித்து,​​ மக்​காக குப்​பை​களை அகற்ற தனி​யார் நிறு​வ​னத்​து​டன் ஒப்​பந்​தம் செய்​துள்​ளோம்.​
ரூ.​ 40 லட்​சம் மதிப்​பீட்​டில் விருத்​தா​ச​லம்-​ திருச்சி சாலை​யில் புற​வ​ழிச் சாலை அமைக்​கும் பணி நடை​பெற்​று​வ​ரு​கி​றது.​ பாதாள சாக்​க​டைத் திட்​டம் மற்​றும் பஸ் நிலைய இட​மாற்​றம் இவ்​வி​ரண்டு பணி​க​ளும் கிடப்​பில் உள்​ளன.​ இது​தொ​டர்​பாக சட்​டப்​பே​ர​வை​யில் விஜ​ய​காந்த் எது​வும் பேசு​வது கிடை​யாது.​

                  பு ​திய பஸ் நிலை​யம் கட்​டு​வ​தற்கு விருத்​தா​ச​லம் சந்​திப்பு எதிரே 5.7 ஏக்​கர் இடம் தேர்​வு​செய்​துள்​ளோம்.மேலும் பாதாள சாக்​க​டைத் திட்​டத்​தின் மூலம் கழி​வு​நீரை கொண்​டு​செல்​லும் வழி குறித்​தும் சட்​டப்​பே​ர​வை​யில் பேசி உள்​ளாட்​சித் துறை அமைச்​சர் கவ​னத்​திற்கு தொகுதி எம்​எல்ஏ முயற்​சித்​தால் மட்​டுமே,​இப்​ப​ணி​கள் விரை​வில் நடை​பெற வாய்ப்​புண்டு.​

            வி​ருத்​தா​ச​லம் விருத்​த​கி​ரிஸ்​வ​ரர் கோயில் எதிரே இருந்த நந்​த​வன இடத்​தில் மார்க்​கெட் அமைந்​தி​ருந்​தது.​ தற்​போது ​ அந்த மார்க்​கெட்டை அகற்றி,​​ வாகன நிறுத்​த​மி​ட​மாக மாற்ற முயற்சி மேற்​கொண்​டால்,​​ கோயில் நிர்​வா​கத்​தி​னர்,​​ அனு​மதி மறுக்​கின்​ற​னர்.போக்​கு​வ​ரத்​துப் போலீ​சா​ரும் பொறுப்​பற்ற முறை​யில் இருப்​ப​தால் வாகன நெரிச​லில் மக்​கள் சிக்​கித் தவிக்​கி​றார்​கள் என்​றார் அவர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior