பண்ருட்டி :
பண்ருட்டி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.
தமிழக உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் எ.வ.வேலு, உணவு பொருள் வழங்கல் துறை செயலர் சுரண்சிங், கமிஷனர் ராஜாராம், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், ஐ.ஜி., சுந்தரமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று கடலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை, கந் தம்பாளையம், எல்.என். புரம் முத்தையா நகர், பண்ருட்டி ஆதிபிள்ளை தெருவில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் இருப்பு அளவு, விற்பனை உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தார். அப் போது அருகில் உள்ள வீடுகளில் உள்ளவர்களிடம் "ரேஷன் பொருட்கள் சீராக வழங்கப்படுகிறதா... போலிரேஷன் கார்டுகள் உள்ளதா' என விசாரணை செய்தார். கந்தன்பாளையம் மக்கள், தங்கள் பகுதிகளில் இலவச "டிவி' மற்றும் காஸ் இணைப்பு வழங்கவில்லை என முறையிட்டனர். அதற்கு அமைச்சர், 40 லட்சம் "டிவி'க்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள் ளது. அனைவருக்கும் வரும் ஆகஸ்ட் மாதம் "டிவி' வழங்கப்படும் என்றார்.
பின் பண்ருட்டி தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் வட்ட வழங்கல் பிரிவு அலுவலகத்தில் அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது கண்ட ரக்கோட்டை, பண்ருட்டி ரேஷன் கடைகளில் ஆய்வின் போது கொண்டு வந்த பதிவேடுகள் மற்றும் அந்த கடைகளில் நீக்கப் பட்ட போலி ரேஷன் கார்டுகளின் பட்டியலை கேட்டார். அதற்கு மாவட்ட வழங்கல் அலுவலர், வட்ட வழங்கல் அலுவலர்கள் பட்டியல் கையில் இல்லை என்றதால், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உத்தரவிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக