உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜூன் 06, 2010

விண்ணப்பித்த 60 நாளில் ரேஷன் கார்டு அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலு உத்தரவு

சிதம்பரம் : 

                       விண்ணப்பித்த 60 நாளில் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட செயல்பாடுகள் குறித்து அவர் நேற்று ஆய்வு மேற் கொண்டார். பின் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக வளாகத்தில் அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது, அமைச்சர் பேசுகையில்," 

                           வட்ட வழங்கல் அலுவலர்கள் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். பொதுமக்களின் மனுக்கள் உடனுக்குடன் தீர்வு காண வேண் டும். ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம், சேர்த்தல் முகவரி மாற்றம் போன்றவைகளுக்கு அன்றே தீர்வு காண வேண்டும். ஒவ் வொரு மாதமும் 3ம் தேதிக் குள் ரேஷன் கடைகளுக்கு ஒதுக்கீடு ஆணை பிறப் பிக்க வேண்டும்.

                           ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய் அரிசி முறையாக வழங்கப்படுகிறா என வட்ட வழங்கல் அலுவலர் கள் உறுதி செய்ய வேண் டும். விண்ணப்பித்த 60 நாளில் ரேஷன் கார்டு வழங்க வேண்டும். தள்ளுபடி செய்த மனுக்களுக்கு 30 நாளில் பதில் அனுப்ப வேண்டும். முறையாக பதிவேடுகள் மற்றும் கடமையை செய்யாத வட்ட வழங்கல் அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

                         ஆய்வு கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலர் சுரண்சிங், ஆணையர் ராஜாராமன், கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ் ணன், கலெக்டர் சீத்தாராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

                           பதிவேடு பராமரிக்காத டி.எஸ்.ஓ., சஸ்பெண்ட் : உணவுத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேற்று காலை பண்ருட்டி வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஆய்வு செய்தார். அப்போது "அ' பதிவேடு முறையாக பராமரிக்காததும், ரத்து செய்த ரேஷன் கார்டு விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்யாததும் கண்டறிந்தார். உடன் இதற்கு காரணமான பண்ருட்டி வட்ட வழங்கல் அலுவலர் சுப்ரமணியனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

                          நெய்வேலி இந்திரா நகர் மற்றும் பிளாக் 25 ரேஷன் கடைகளை ஆய்வு செய்தபோது ரேஷன் கார்டு குறித்த விவரங்களை முறையாக பதிவு செய்யாததால் குறிஞ்சிப்பாடி வட்ட வழங்கல் அலுவலர் அரங்கநாதன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior