உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 25, 2010

கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் மழை நீடிப்பு: கடல் அலை அரிப்பால் மீனவர் கட்டிடம் சேதம்


கடலூர்:

                 கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. வங்ககடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீடித்தது.

               கடலூர், நெல்லிக்குப்பம், நெய்வேலி, விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் உள்பட பல்வேறு இடங்களிலும் நேற்று பகலில் மழை பெய்தது. நெய்வேலி, கடலூர் ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, விருத்தாசலத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் தொடங்கி இன்று அதிகாலைவரை விட்டு, விட்டு மழை தூறியது. கடல் கொந்தளிப்பு காரணமாக கடலூர் மீனவர்களில் பெரும்பாலானோர் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை.

                     விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, மரக்காணம், வானூர், ஆரோவில், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது. திருக்கோவிலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் மழை தூறியது இன்று காலையிலும் மழை நீடித்தது. கடல் சீற்றம் காரணமாக சின்ன முதலியார் சாவடி, பெரிய முதலியார் சாவடி, பொம்மையார்பாளையம், கோட்டக்குப்பம் பகுதி மீனவர்கள் 4-வது நாளாக இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.  சின்ன முதலியார் சாவடி பகுதியில் ஆர்ப்பரித்த கடல் அலை அரிப்பால் கரையோரத்தில் கட்டப் பட்டிருந்த மீனவர்கள் வலை பின்னும் கட்டிடம் சேதமடைந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior