உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 25, 2010

விளக்கப்பாடியில் அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் சிதம்பரம் சாலையில் மறியல்

விருத்தாசலம் : 

                 விளக்கப்பாடி கிராம மக்கள் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

                 விருத்தாசலம் கம்மாபுரம் அடுத்த விளக்கப்பாடி கிராமத்தில் இருந்து முகந்திரையான்குப்பம் கிராமத்திற்கு இணைப்பு சாலை உள்ளது. இச்சாலை வழியாகத்தான் விளக்கப்பாடி காலனி சுடுகாட்டிற்கு செல்ல வேண்டும். இந்த சாலை பல ஆண்டுகளாக செப்பனிடப்படாததால் தற் போது சேரும் சகதியுமாக மாறி நடந்து செல்லவே முடியாத நிலையில் உள்ளது.

                 இச்சாலையை செப்பனிட்டு புதிய சாலை அமைக்கவும், கிராமத்தில் குடிநீர் வசதி செய்து தரக்கோரியும் அக்கிராம மக்கள் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் நேற்று காலை 11 மணிக்கு திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால், துணை பி.டி.ஓ., குணசேகரன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், அதிகாரிகள் வந்து சாலையை பார்வையிட வேண்டும் என கேட்டனர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

                    இதனைத் தொடர்ந்து ஊருக்குள் செல்ல முயன்ற துணை பி.டி.ஓ., காரை பொதுமக்கள் முற்றுகையிட்டு அதிகாரிகள் எங்கள் ஊருக்கு வரவேண்டாம், எதுவும் செய்ய வேண்டாம். நாங்கள் கலெக்டரை சந்தித்து குறைகளை கூறிக் கொள்கிறோம் என தெரிவித்து 11.35 மணிக்கு கலைந்து சென்றனர். இதனால் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் 35 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior