சிதம்பரம்:
அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூரக் கல்வி இயக்ககத்தில் திரைப்பட தொழில்நுட்ப கல்வி துவக்க விழா நடந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககம் மற்றும் ஹைதராபாத் ஜீவன் ஸாப்டெக் சார்பில் திரைப் பட தொழில் நுட்பம் சார்ந்த கல்வியை துவக்குவது என முடிவு செய்யப்பட்டது.
ஹைதராபாத் தாஜ் டெக்கான் ஹோட்டலில் நடந்த விழாவிற்கு அமைச்சர் புரந்தேஷ்வரி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் ராமநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில் அமைச்சர் புரந்தேஷ்வரி கையேட்டை வெளியிட்டு பேசுகையில்,
உயர்கல்வி விகிதத்தை இந்தியாவில் உயர்த்த வேண்டியது அவசியம். இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு தேவையான கல்வி தருவதற்கு கல்லூரிகளோ, பல்கலைக்கழகங்க ளோ இல்லை. அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், ஜீவன் ஸாப்ட் டெக்கும் இணைந்து வழங்கும் திரைப்பட தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகளை வழங்குவது பாராட்டுக்குறியது என்றார்.
பல்கலைக்கழக துணை வேந்தர் ராமநாதன் பேசுகையில், திரைப்படம் என்பது ஒரு முக்கிய கலை மற்றும் பொழுதுபோக்கு அம்சமாகும். சமுதாயத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் வெளிப்படுத்துவதாகவும், அது ஒரு தொழில் துறையாகவும் முன்னனேற்றம் அடைந்துள்ளது. திரைப் பட துறையில் எல்லா அம்சங்களையும் கல்வி சார்ந்து வடிவமைக் கப்பட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஹைதராபாத்தில் உள்ள ஜீவன் ஸாப்ட்டெக்குடன் புரிந் துண்வு ஒப்பந்த முறையில் எம்.பி.ஏ., பி.பி.ஏ., மீடியா மேனேஜ்மெண்ட் மற்றும் திரைப்பட தொழில் நுட்பத்தில் பட்டயம் மற்றும் பட்டப் படிப்புகளை இந்த கல்வி ஆண்டு முதல் வழங்க இருக்கிறது.
தொலைதூரக்கல்வி இயக்குனர் நாகேஸ்வரராவ், திரைப்பட தயாரிப்பாளர் தம்மாரெட்டி பரத் வாஜா, நடிகர் சலபதிராவ், லாபிங் லயன்ஸ் அனிமேஷன் ஸ்டுடியோ தலைவர் ஸ்ரீகாந்த், ஜீவன் ஸாப்ட் டெக் தலைவர் சீத்தாராமய்யர் உட்பட பலர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக