உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 03, 2010

ரயில்பாதை அரிப்பை தடுக்க ரூ. 92 லட்சத்தில் வெள்ளாற்றில் தாற்காலிக பனமரத் தடுப்பு


 
சிதம்பரம்:
                  விழுப்புரம்-மயிலாடுதுறை இடையேயான ரயில்பாதையில் சிதம்பரத்தை அடுத்த கிள்ளை-பரங்கிப்பேட்டை இடையே வெள்ளாறு அரிப்பெடுத்து ரயில்பாதையை நெருங்கியுள்ளது.
 
                 இதனால் ரயில்பாதை பாதிக்கும் நிலை உருவானது. இதைத் தடுக்க தாற்காலிகமாக பொதுப்பணித் துறை சார்பில் ரூ. 92 லட்சம் செலவில் வெள்ளாற்றில் ரயில்பாதை ஓரம் பனமரங்களாலான தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தார்.
 
இது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தது: 
 
                        சிதம்பரத்தை அடுத்த கிள்ளை-பரங்கிப்பேட்டை இடையே ரயில்பாதையிலிருந்து 1915-ல் 1400 மீட்டர் தூரம் வெள்ளாறு இருந்தது. அதன் பின்னர் 1930-ல் 600 மீட்டரும், 1970-ல் 30 மீட்டரும், 2005-ல் 3.5 மீட்டரும் தூரமும் வெள்ளாறு அரிப்பெடுத்து ரயில்பாதையை நெருங்கியது. இதை தடுக்காவிடில் மயிலாடுதுறை-விழுப்புரம் இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கும் நிலை உருவாகும். 
 
                   வெள்ளாறு அரிப்பெடுத்து ரயில்பாதையை நெருங்கியதால் தலைமைச் செயலர் தலைமையில் சென்னையில் தென்னக ரயில்வே முதன்மைப் பொறியாளர், பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டு தாற்காலிகமாக வெள்ளாற்றில் 360 மீ. தூரத்துக்கு ரூ. 92 லட்சம் செலவில் பனமரத்தடுப்பு மற்றும் மணல் மூட்டைகள் அமைத்து தடுப்பு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பணி நடைபெற்று வருகிறது.
 
                          இன்னும் 10 தினங்களில் பணி முடிவுறும். மேலும் வெள்ளாற்றின் அரிப்பைத் தடுக்க ஆற்றின் நீரை திருப்பிவிட நிரந்திரத் தீர்வு காண நீர்வளஆதாரத் துறை தலைமைப் பொறியாளர் குமரேசன் தலைமையில் தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது என செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior