உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 03, 2010

அணைக்கரை பாலத்தில் டிசம்பர் முதல் போக்குவரத்து நிறுத்தம் : செயற்பொறியாளர் தகவல்





காட்டுமன்னார்கோவில் : 

           பழுதடைந்த அணைக்கரை பாலம் சீரமைப்பு பணிக்காக, வரும் டிசம்பர் முதல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுகிறது.

                 சென்னை - கும்பகோணம் சாலையில் 174 ஆண்டுகள் பழமையான கொள்ளிடம் அணைக்கரை பாலம் கடந்த ஆண்டு பலவீனமடைந்தது. இதனால் பாதுகாப்பு கருதி, கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, இலகு ரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை - கும்பகோணம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள், பாலத்தில் நடந்து சென்று மறு பகுதியில் பஸ் ஏறி சென்று வருகின்றனர். மேலும் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் பயன்படுத்தும் இப்பாலத்தை ஒருவரும் கண்டு கொள்வதில்லை என, கடந்த ஆக.,1ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.

                    இந்நிலையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பாலத்தை பார்வையிட்டு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதனையொட்டி, பாலத்தின் அவசர அவசியம் கருதி, தற்காலிகமாக சீரமைப்பு பணி மற்றும் 94 ஷட்டர்கள் சீரமைக்க, 6 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி துவங்கி நடந்து வருகிறது. பாலத்தில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ரசாயன பூச்சு மூலம் சீரமைக்கும் பணி நடக்கிறது. முதல் கட்டமாக அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைக்கப்படுகிறது. 

இதுகுறித்து, செயற்பொறியாளர் செல்வராஜ் கூறுகையில்,

                    "பழுதடைந்த இடங்கள் செப்பனிட்டு ரசாயன பூச்சு (கெனைட்டிங்) மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து, டிசம்பர் மாதத்தில் இருந்து பாலத்தில் மேல் பகுதியில் பணிகள் துவங்குவதால், தற்போது இயக்கப்படும் இலகுரக வாகனங்களும் முற்றிலும் நிறுத்தப்படும். மொத்த பணிகளும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடித்து, மார்ச் துவக்கத்தில் போக்குவரத்து துவங்கப்படும். அணைக்கரையில் நிரந்தர பாலம் கட்ட 940 மீ., முன் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior