உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 03, 2010

தழைச்சத்து உரத்திற்கு அசோலா பயன்படுத்த வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுரை

கடலூர் : 

                தழைச்சத்து உரத்திற்கு அசோலாவை பயன்படுத்த வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் இளவரசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 

                      இயற்கை, உயிர், ரசாயன உரங்களை பயன்படுத்தி பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை உரிய காலத்தில் சமச்சீர் அளவில் அளிப்பதே ஒருங்கிணைந்த உர மேலாண்மையாகும். தாவர வகை தழைச்சத்து உரமான அசோலா பிற உயிரினங்களோடு சார்ந்து இயங்கும் பெரணி வகை தாவரம்.  அனாபீனா அசோலி என்ற நீலபச்சைப்பாசி அசோலாவின் உள்ளிருந்து வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது. பயிருக்கு தழைச்சத்து அளித்து மண்ணிற்கு இயற்கை உரமாக மாறி மண் வளத்தை பெருக்குகிறது. 

                      விவசாய நிலங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ள வாய்க்கால் பகுதிகளிலும் அசோலா இயற்கையாகவே வளர்ந்து இருப்பதை கவனித்து சேகரித்து நெல் வயல்களில் தூவி வளர்த்த பின் மிதித்து அழித்து விடலாம். ஒரு ஏக்கருக்குத் தேவையான அசோலாவை உற்பத்தி செய்ய 4 சென்ட் நாற்றங்கால் போதுமானது. ஒரு சென்ட்டுக்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் 10 கிலோ மாட்டுச்சாணமும் இட்டு 5 - 10 செ.மீ., வரை தண்ணீர் தேக்க வேண் டும். அதன்மேல் ஒரு சென்ட்டுக்கு 8 கிலோ அசோலா வீதம் பரப்பி விட வேண்டும். 

                     இந்த நாற்றங்காலிலிருந்து 7 நாட்களுக்கு ஒரு முறை ஒரு சென்ட்டில் 50 கிலோ என்ற அளவில் அசோலா கிடைக்கும். அசோலாவை ஏக்கருக்கு 100 கிலோ வீதம் பரப்பி ஒரு வாரம் தண்ணீர் தேக்கி வைத்திருந்து சேற்றில் மிதித்துவிட்டு பின் நடவு செய்ய வேண்டும். அவ்வாறு அசோலா இட்ட வயலில் 25 சதவீதம் தழைச்சத்து உரத்தை குறைக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior