உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 23, 2010

புவனகிரியில் மழையில் மிதக்கும் பள்ளி : மாணவர்கள் தவிப்பு




புவனகிரி : 

              புவனகிரி அடுத்த வத்துராயன்தெத்து, பள்ளியில் வடிகால் வசதியின்றி மழைக் காலங்களில் குளம் போல் தண்ணீர் சூழ்ந்து விடுவதால், கடந்த 11 ஆண்டுகளாக மாணவ, மாணவியர் தவித்து வருகின்றனர். 

                கடலூர் மாவட்டம், மேல்புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட வத்துராயன்தெத்து ஊராட்சியில், 1999 - 2000ம் ஆண்டில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆரம்பப் பள்ளி கட்டப்பட்டது. பள்ளி தொடங்கி 11 ஆண்டுகள், ஆனாலும் வடிகால் வசதியின்றி மழைக் காலத்தில், பள்ளி வளாகத்திற்குள் தேங்கிய தண்ணீர் வெளியேற முடியாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் சகதியில் நடந்தே பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. 

                 பள்ளி வளாகத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதும், பள்ளியின் அருகே சாலை போடப்பட்டதுமே, மழை நீர் வெளியேற முடியாததற்கு காரணம். 

ஊராட்சி தலைவர் குணசேகரன் கூறுகையில், 

                   "கடந்த மூன்று மாதத்திற்கு முன் கலெக்டரிடம் பள்ளி வளாகத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என மனு கொடுத்துள்ளேன். இதுவரை நடவடிக்கை இல்லை' என்றார். பள்ளி குழந்தைகளுக்கு நோய் வராமல் தடுக்க வடிகால் வசதியும், சுகாதார வசதியும் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior