உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 23, 2010

கடலூரில் கன மழை: மீன்பிடித் தொழில் பாதிப்பு




சிதம்பரம்:

                சிதம்பரத்தை அடுத்த கடலோரப் பகுதியான முடசல்ஓடை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் பலத்த காற்றுடன்கூடிய கன மழை காரணமாக மீன்பிடிக்கச் செல்லாததால் மீன்பிடித் தொழில் பாதித்துள்ளது.

               சிதம்பரத்தை அடுத்த கிள்ளை முடசல்ஓடை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கடல் அலை வழக்கத்தை விட அதிகமாக உள்ளதாலும், தொடர்ந்து கன மழை மற்றும் பலத்த காற்று வீசுவதாலும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

                  தங்களது படகுகளை பாதுகாப்பு கருதி முடசல்ஓடையில் நிறுத்தி வைத்துள்ளனர். சிதம்பரம் அருகே உள்ள மீனவ கிராமங்களிலிருந்து சிதம்பரம் மீன்மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு மீன் கொண்டு செல்லப்படும். தற்போது மீன்பிடிக்க மீனவர்கள் செல்லாததால் கேரளத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்கள் சிதம்பரம் மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகின்றன. இதனால் மீன் விலையும் உயர்ந்துள்ளது. உதாரணமாக கிலோ ரூ. 150-க்கு விற்ற மீன் தற்போது ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior