உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 15, 2010

கடலூர் மாவட்டத்தில் சாலைகளை சீரமைக்க ரூ.17.67 கோடி நிதி ஒதுக்கீடு: கலெக்டர் சீத்தாராமன் தகவல்

கடலூர் :

             மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க முதல் கட்டமாக 17.67 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

              கடலூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த கன மழையால் உயிரிழந்த 18 பேரில் இதுவரை 7 பேருக்கு தலா 2 லட்சம் ரூபாய்  நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் 176 ஆடுகளும், 86 மாடுகளும், 54 கன்றுகள் என 315 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இதுவரை 49 மாடுகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதமும், 49 கன்றுகளுக்கு தலா 5,000 ரூபாய் வீதமும், 126 ஆடுகளுக்கு தலா 1,000 ரூபாய் வீதமும்  நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 

              மழை வெள்ளத்தால் 1,162 குடிசைகள் முழுமையாகவும், 14 ஆயிரத்து 595 குடிசைகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.  இதுவரை முழுமையாக சேதமடைந்த 914 குடிசைகளுக்கு 5,000 ரூபாய் வீதம் 45.70 லட்சமும், பகுதியாக சேதமடைந்த 1,264 குடிசைகளுக்கு தலா 2,500 ரூபாய் வீதம் 31.60 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. கடலூர் நகராட்சியில் 14 கி.மீ., சாலை சீரமைப்புக்கு 70 லட்ச ரூபாயும், சிதம்பரம் நகராட்சியில் 8 கி.மீ., தூர சாலை சீரமைக்க 40 லட்ச ரூபாயும், விருத்தாசலம் நகராட்சியில் 5 கி.மீ., சாலை சீரமைக்க 25 லட்ச ரூபாயும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. 

                    மேலும் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மூலம் வடிகால்கள், உடைப்புகள், ஏரிகள் ஆகியவற்றை தற்காலிகமாக சீரமைக்க 4.32 கோடி ரூபாய் முதல் கட்டமாக பெறப்பட்டுள்ளது. மேலும் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க கூடுதலாக 10 கோடி ரூபாய் நிதி அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior