உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 15, 2010

கடலூர் சிப்காட்டில் விக்டரி கெமிக்கல் தொழிற்சாலை திடீர் மூடல் கடலூரில் தொழிலாளர்கள் முற்றுகை

கடலூர் : 

               கடலூர் சிப்காட்டில் விக்டரி கெமிக்கல் கம்பெனி முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால் தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். கடலூர் சிப்காட்டில் உள்ள விக்டரி கெமிக்கல் கம்பெனியில் பெரியம் கார்பனைட், பெரியம் நைட்ரேட், சோடியம் ஞசல்பைடு  ஆகிய மூலப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தது. கடந்த 19 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் 40 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 250க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். 

                இந்நிலையில் முன்னறிவிப்பின்றி விக்டரி கம்பெனி நேற்று முன்தினம் நள்ளிரவு ஷிப்டின் போது வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை வெளியேற்றி விட்டு பூட்டு போடப்பட்டது. 

கம்பெனி கேட்டில் ஒட்டப்பட்ட நோட்டீசில், 

                          "தொழிற்சாலையின் விற்பனை சரிவு காரணமாக உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்ய முடியாமல் கம்பெனி நஷ்டத்தில் இயங்கியது. இதனை தொடர்ந்து சமாளிக்க முடியாத காரணத்தால் கம்பெனி 14-12-10ம் தேதி முதல் மூடப்படுகிறது. தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய அனைத்து தொகையும் பதிவுத் தபாலில் அனுப்பப்பட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது. 

             இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் மற்றும் கம்பெனியைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட 100க்கு மேற்பட்டோர் கம்பெனியை முற்றுகையிட்டனர். 

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலர் பாலகிருஷ்ணன் கூறுகையில், 

                  "விக்டரி நிறுவனம் எவ்வித முன்னறிவிப்புமின்றி நேற்று முன்தினம் இரவு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை கூலிப்படையினர் கொண்டு மிரட்டி வெளியேற்றி விட்டு கம்பெனிக்கு பூட்டு போட்டுள்ளனர். லாபத்தில் இயங்கி வந்த நிறுவனம் திடீரென நஷ்டம் ஏற்பட்டுள்ளது என காரணமாக கூறி பூட்டப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. மீண்டும் கம்பெனியைத் திறந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior