கடலூர் :
கடலில் ஏற்படும் மாற்றத்தினால் கரையோரம் குடியிருப்போர் பாதிப்பைத் தடுக்கும் வகையில் கடலூர் பகுதியில் கடல் மட்டம் குறித்து இந்திய நில அளவை மையம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உலக அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பின் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக பூமியில் ஏற்படும் நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள், புகை, மாசு காரணமாக ஓசோன் படலத்தில் ஒட்டை விழுந்துள்ளது. இதனால் பூமியில் தட்பவெப்ப நிலைகள் மாற்றம் ஏற்பட்டு, வறட்சி, அதிக மழை போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்கிறது.
மேலும், ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டை காரணமாக சூரிய ஓளி நேரடியாக பூமிக்கு வருவதால் அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டிகள் உருகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடலில் நீர் மட்டம் உயர்வதால் கடலோர கிராமங்கள் கடல் நீர் புகுந்து அழியும் நிலை ஏற்படும் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். கடலோர பகுதிகளை பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு பகுதியிலும் கடல் மட்டம் கணக்கிடப்பட்டு அதற்கு தகுந்தாற்போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள, திட்டங்கள் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கடலோர கிராமங்களை பாதுகாக்கும் வகையில் இந்திய நில அளவை மையம் கடலின் நீர் மட்டம், கரையின் மட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். கடலூரில் பெண்ணையாற்று பாலத்திலிருந்து கடலூர் முதுநகர் வரையில் சாலைகள் கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் உள்ளது என அதிகாரிகள் கணக்கெடுக்கம் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து வான் வழியாக ஹெலிகாப்டர் மூலம் படம் பிடிக்கப்பட்டு கணக்கிடப்படும் என தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக