சிதம்பரம் :
கடலூர் - சிதம்பரம் தனியார் பஸ்சில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக முத்திரையுடன் டிக்கெட் வழங்கப்படுகிறது. சிதம்பரம் - கடலூர் வழியாக இயக்கப்படும் பெரும்பாலான பஸ்களில், மின்னணு டிக்கெட் வழங்கப்படுகிறது.
அரசு மற்றும் தனியார் பஸ்களில் வழங்கப்படும் மின்னணு டிக்கெட்டுகள், சாதாரண வெள்ளை நிற காகிதத்தில் அச்சாகி இருக்கும். பயணிகள் செல்லும் ஊர், நேரம், கட்டணம், பஸ் எண் உள்ளிட்ட தகவல்கள் அதில் அச்சிடப்பட்டிருக்கும். இந்நிலையில், சிதம்பரம் - கடலூர் மார்க்கமாக இயங்கும் தனியார் பஸ் ஒன்றில் வழங்கப்பட்ட மின்னணு டிக்கெட்டில், "எம்.டி.எஸ்' சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் என முத்திரை உள்ளது.
இதை பார்த்த பயணிகள் புரியாமல் விழித்தனர். கடலூர் மாவட்டத்தில் அதிகம் இயங்கும் விழுப்புரம், கும்பகோணம் கோட்ட அரசு பஸ்களில் கூட, முத்திரை இல்லாமல் டிக்கெட் வழங்கப்படும் நிலையில், தனியார் பஸ்சுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக்கழக முத்திரையுடன் டிக்கெட் வந்தது எப்படி என குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக