உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 15, 2010

ஜெயங்கொண்டத்தில் புதிய மின்நிலையம்: என்.எல்.சி. தலைவர் அன்சாரி தகவல்

நெய்வேலி:

            ஜெயங்கொண்டத்தில் புதிய மின்நிலையம் அமைக்கப்படும் என்று என்.எல். சி. தலைவர் அன்சாரி கூறினார். நெய்வேலி என்.எல்.சி. நிறுவன தலைவர் அன்சாரி  பேட்டியளித் தார். 
அப்போது என்.எல்.சி. நிறுவன தலைவர் அன்சாரி கூறியது:-

             என்.எல்.சி. நிறுவனம் நடப்பு நிதியாண்டியில் முதல் 8 மாதங்களில் என்.எல்.சி. நிறுவனத்தின் மின்நிலையங்கள் 1152.711 கோடி யூனிட் மின்சக்தி உற்பத்தி செய்துள்ளது. இது சென்ற நிதி ஆண்டை காட்டிலும் அதிகம். புதிய திட்டங்களை பொருத்த வரை உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் ஹாட்டாம்பூர் பகுதியில் 2 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்தினை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

                 மேலும், ராஜஸ்தான் மாநிலம் பர்சிங்சரில் 125 மெகாவாட் மின்உற்பத்தி பிரிவு இவ்வாண்டு ஜூன் 5ந் தேதி பரிசோதனை முறையில் இயக்கி வைக்கப்பட்டது. நெய்வேலி இரண்டாவது அனல் மின் நிலைய விரிவாக்கத்திட்டத்தின் முதல் 250 மெகாவாட் மின்உற்பத்தி பிரிவில் 2011ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார் கிறோம். மேலும், நாகை மாவட்டம் சீர்காழியில் 2000 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்நிலையத்தை அமைக்க உள்ளோம்.

                  இதனை தொடர்ந்து மேலும் 2000 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை மற்றொரு இடத்தில் தொடங்க உள் ளோம். ஜெயங்கொண்டத்தில் சுரங்கம் மற்றும் மின் நிலையம் அமைக்க திட்ட மிட்டு இருந்தோம். அங்கு நிலம் கையகப்படுத்தும் பணி மிகப்பெரியளவில் உள்ளது.  எனவே அப்பகுதியில் பொருளாதார மாற்றம் ஏற்பட வேண்டும் என அங்கும் வசிக்கும் மக்கள் விரும்பும் பட்சத்தில் அவர் களாகவே தங்கள் நிலங்களை என்.எல்.சி.யிடம் வழங்க முன்வந்தால், மின்நிலையம் அமைப்பது குறித்து பரீசிலனை செய்வோம்.

               அப்பகுதியில் வசிக்கும் 12 ஆயிரம் குடும்பங்களை காலி செய்யுங்கள் என்று கூறுவதற்கு உணர்வு ரீதியாக நாங்கள் தயங்குகிறோம். ஏனெனில் அவர்கள் காலம் காலமாக அவ்விடத்தில் வாழ்ந்து வருகிறார்கள். எனவே அவர்களை வேறு இடங்களுக்கு போக சொல்ல மனமில்லை. இருப்பினும், 2017ம் ஆண்டிற்குள் 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளோம். 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் சீர்காழி மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தில் அமைக்க உள்ள மின்நிலையங்களுக்கு பூர்வாங்க பணிகளை மேற்கொள்வோம்.

                      தற்போது, என்.எல்.சி. நிறுவனம் பழுபு  நிலக்கரிக்கு மாற்றாக நிலக்கரியை எரி பொருளாக கொண்ட புதிய திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அனைத்துதுறைகளிலும் வளர்ச்சியடைந்து வரும் இந்த நிறுவனம் தனது விரிவாக்க திட்டங்களின் மூலம் அடுத்த சில சீடுண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டவுள்ளது. அப்படி, புதிய திட்டங்களை நிறைவேற்றிய நிலையில், என்.எல்.சி. நிறுவனத்தின் பழுபு நிலக்கரி மற்றும் நிலக்கரி உற்பத்தி திறன் தற்போதைய அளவை விட மூன்று மடங்கு அதிரிக்கும் எனஎதிர்பார்க்கபடுகிறது.

                  என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் தளராத உழைப்பால் விரைவில் இந்நிறுவனம் மினிரத்னா தகுதியிலிருந்து நவரத்னா தகுதிக்கு உயர்த்தபட இருக்கிறது. நாட்டின் அனைத்து பகுதி களுக்கும் என்.எல்.சி. தனது சேவையை விரிவுப்படுத்தப் பட உள்ளது.  இவ்வாறு என்.எல்.சி. நிறுவன தலைவர் அன்சாரி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior