கடலூர் :
கடலூர் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் 20 லட்சம் ரூபாய் கையாடல் செய்த ஊழியர்கள் இருவரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.
கடலூர் அடுத்த எழுமேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடப்பதாக புகார் வந்தது. துணைப் பதிவாளர் ஜெயமணி சில மாதங்களுக்கு முன் அங்கு ஆய்வு மேற்கொண்டார். அதில் கடந்த 1.4.2006 முதல் 1.9.2009வரை விவசாயிகளுக்கு கடன் கொடுத்ததாக போலியாக ஆவணங்களை தயாரித்து சங்கச்செயலர் தவமணி, எழுத்தர்கள் கார்த்திகேயன், சிவக்குமார், சையத்ரசூல், காசாளர் சேகர் ஆகியோர் 19 லட்சத்து 88 ஆயிரத்து 374 ரூபாய் 90 பைசா கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.
துணைப் பதிவாளர் ஜெயமணி, மாவட்ட வணிகவியல் குற்றப் புலனாய்வு பிரிவில் புகார் செய்தார். டி.எஸ்.பி., ரீட்டா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் தனராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மோசடி குறித்த ஆவணங்கள் சிக்கியதைத் தொடர்ந்து சங்கத்தின் காசாளர் சேகர், எழுத்தர் சையத்ரசூல் ஆகியோரை நேற்றிரவு கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட செயலர் தவமணி, எழுத்தர் கார்த்திகேயன் ஆகியோர் இறந்து விட்டதால், தலைமறைவாக உள்ள சிவக்குமாரை போலீசார் தேடிவருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக