உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 04, 2010

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த விவசாயிகளுக்கு ஓராண்டுக்கு பின் பயிர் காப்பீட்டு தொகை



பயிர் காப்பீட்டுத் தொகை வழங்குகிறார், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

சிதம்பரம் : 

                 கடந்த ஆண்டு மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கும் விழா சிதம்பரத்தில் நடந்தது.

              கலெக்டர் சீத்தாராமன் வரவேற்றார். நிகழ்ச்சியில் எம்.பி., திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., ரவிக்குமார், சேர்மன்கள் செந்தில்குமார், பவுஜியாபேகம், மாமல்லன் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் 11 ஆயிரத்து 646 விவசாயிகளுக்கு 2 கோடியே 68 லட்சத்து 30 ஆயிரத்து 993 ரூபாய் இழப்பீடு தொகைக்கான காசோலையை அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், 

                      "மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற போது  கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு காப்பீடு தொகை வழங்கவில்லை என முறையிட்டனர். கோரிக்கையை ஏற்று போர்க்கால அடிப்படையில் 24 மணி நேரத்தில் இத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு தற்போது வழங்கப்பட்டது' என்றார்.

பரங்கிப்பேட்டை: 

                  பு.முட்லூர் கலைஞர் நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஒரு வாரமாக சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி உணவுப் பொட்டலம் வழங்கினார்.
கடலூர்:  

              பாதிரிக்குப்பம் பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு முகாம்களில் உள்ள 500க்கும் மேற்பட்டோருக்கு எம்.எல்.ஏ., அய்யப்பன் உணவு பொட்டலங்கள் வழங்கினார்.
கிள்ளை: 

            சிதம்பரம் தொகுதி எம்.பி.,திருமாவளவன் மøழால் பாதிக்கப்பட்ட குண்டுமேடு, நவாப்பேட்டை, மடுவங்கரை, புஞ்சைமகத்து வாழ்க்கை பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

புவனகிரி: 

                  வெள்ளாறு கரை உடைப்பால் பாதிக்கப்பட்ட மஞ்சக்கொல்லை, மிராளூர் ஆகிய பகுதிகளை நேற்று காலை கலெக்டர் சீத்தாராமன் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பண்ருட்டி:

               மழையால் பாதிக்கப்பட்ட களத்துமேடு, திடீர்குப்பம்,  அம்பேத்கர் நகர், செட்டிப்பட்டறை காலனி, சுவர் இடிந்த விழுந்த திருவதிகை நகராட்சி துவக்கப் பள்ளி மற்றும் வீடுகளை சேர்மன் பச்சையப்பன், கமிஷனர் உமா மகேஸ்வரி பார்வையிட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior