உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 04, 2010

கடலூரில் கடல் கொந்தளிப்பு: திடீரென கரை திரும்பிய மீனவர்கள்


மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாததால், வெறிச்சோடிக் கிடக்கும், கடலூர் முதுநகர் மீன் இறங்குதளம். அருகில் கட்டி வைக்கப்பட்டு இருக்கும் விசைப் படகுகள்.
 
கடலூர்: 

                கடலூரில் இருந்து வெள்ளிக்கிழமை கடலுக்குள் சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள், கடல் கொந்தளிப்பு காரணமாக திடீரெனக் கரை திரும்பினர்.

                 கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் மீன்பிடித் தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. சுமார் 30 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு, வேலைவாய்ப்பு இல்லாமல் போயிற்று. கடந்த 5 நாள்களாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன் அங்காடிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

                 வெள்ளிக்கிழமை கடலூரில் மழையின்றி, வானம் மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்டது. கடந்த 5 நாள்களாக கடலுக்குள் செல்லாமல் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள், சுமார் 200 படகுகளில் கடலுக்குள் சென்றனர். ஆனால் கடல் சீற்றத்தைக் கண்டு பயந்து, காலையிலேயே வேகமாகக் கரை திரும்பியதாக மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் தெரிவித்தார். மேலும் 5 நாள்களுக்கு முன் ஆழ் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 50-க்கும் மேற்பட்ட பெரிய படகுகள், இன்னும் கரை திரும்பவில்லை என்றும் சுப்புராயன் கவலை தெரிவித்தார்.

                     மீன் பிடித்தொழில் முடங்கியதால் கடலூர் முதுநகர் துறைமுகத்தை அடுத்துள்ள, மீன் இறங்கு தளம், கடந்த 5 நாள்களுக்கும் மேலாக எந்தவித செயல்பாடுகளும் இன்றி, வெறிச்சோடிக் கிடக்கிறது. இந்த மீன் இறங்கு தளத்தில் சாதாரண நாள்களில், அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் சுமார் 500 பேரைப் பார்க்க முடியும். மீன்களை படகுகளில் கொண்டு வந்து இறக்குவதும், அவற்றை ஏலம் விடுவதும், வியாபாரிகள் ஏலம் கேட்டு கொள்முதல் செய்வதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்த இடம் ஆள் நடமாட்டம் இன்றி காணப்படுவது மீனவர்களைப் பெரிதும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior