உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வெள்ளி, ஜனவரி 21, 2011

கடலூர் மாவட்டத்தில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து

கடலூர் : 

            கடலூர் மாவட்டத்தில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வரும் 23ம் தேதி துவங்குகிறது என்று சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மீரா கூறியுள்ளார். 

சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மீரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

           போலியோ எனும் இளம்பிள்ளை வாத நோயை தடுக்க நாடு தழுவிய அளவில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி 1995ம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது 16 வது முறையாக தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் ஆணைக்கிணங்க இந்தாண்டு கடலூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் முதற்கட்டமாக இம்மாதம் 23ம் தேதி நடக்கிறது. 

           இரண்டாம் கட்டமாக பிப்., 27ம் தேதி நடக்கிறது. இப்பணிகளுக்காக நகர்புறம் மற்றும் கிராமப் புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிக் கூடங்கள், சத்துணவு மையம், அங்கன்வாடி மையம் என 1512 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட எல்லையோரம், குடிசைப் பகுதிகள், புதியதாக உருவான பகுதிகள், பணி நிமித்தம் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் வாழும் பகுதியில் 101 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

          இப்போலியோ மருந்துகள் தரம் வாய்ந்தவை. மருந்துகள் யாவும் புதியதாக உற்பத்தி செய்யப்பட்டவை. பாதுகாப்பானவை. எனவே, முகாம் நடைபெறும் நாட்களில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளவும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior