உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 21, 2011

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்


வட​லூர் சத்​திய ஞான​ச​பை​யில் தைப்​பூ​சத்தை முன்​னிட்டு ​ ஜோதி தரி​ச​னம்.​ செய்​யும் வள்​ள​லார் அன்​பர்​கள்.
 
நெய்வேலி:
 
            வள்ளலார் வாழ்ந்த வடலூரில் உள்ள சத்தியஞான சபையில் தைப்பூசத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை 7 திரைகளை நீக்கி 6 காலங்களில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
 
            இந்த ஜோதி தரிசனத்தைக் காண 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் திரண்டிருந்தனர். கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் ஒவ்வொரு ஆண்டு தைப்பூசத்தினத்தன்று ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. இந்த ஜோதி தரிசனத்தைக் காண தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான வள்ளலார் பக்தர்கள் வடலூருக்கு வருவர். இதையொட்டி வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாகமும் தைப்பூச விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.
 
             அதன்படி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 10, பிற்பகல் 1, இரவு 7, 10 மற்றும் வெள்ளிக்கிழமை காலை 6 மணி என ஆறு காலங்களில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.இதில் 10 மணிக்கு நடைபெற்ற ஜோதி தரிசனத்தில் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன், எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ், டி.ஐ.ஜி. மாசானமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.
 
             தைப்பூச விழாவை ஒட்டி, வடலூர் தருமச்சாலை பிரசங்க மேடையில் ஊரன் அடிகளார் தலைமையில் சன்மார்க்க கருத்தரங்கம் நடைபெற்றது. வடலூரில் நடைபெறும் தைப்பூச விழாவை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தைப்பூச ஜோதி தரிசனத்தைக் காண வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நெய்வேலி டி.எஸ்.பி. மணி தலைமையில் 500 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 
               இதைத்தொடர்ந்து சனிக்கிழமை பிற்பகல் 12 முதல் மாலை 6 மணி வரை வள்ளலார்  அருட்பெருஞ்ஜோதியாகிய மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகை திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.வடலூர் சத்திய ஞானசபையில் தைப்பூசத்தை முன்னிட்டு  ஜோதி தரிசனம். செய்யும் வள்ளலார் அன்பர்கள்.

1 கருத்துகள்:

  • Sivamjothi says:
    27 அக்டோபர், 2011 அன்று 7:13 PM

    http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html

    திருவடி தீக்ஷை(Self realization)
    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



    Please follow

    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

    (First 2 mins audio may not be clear... sorry for that)

    (PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




    Online Books
    http://www.vallalyaar.com/?p=409

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior