உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வெள்ளி, ஜனவரி 21, 2011

விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் பயணிகள் ரயில்களை கூடுதலாக இயக்கக் கோரிக்கை

கடலூர்:

           விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் மாணவர்கள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்வோர் வசதிக்காக, கூடுதலாக பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனைக் குழுக் கூட்டம், சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்தது.

மண்டல ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் முனைவர் கடலூர் பி.சிவகுமார் இக் கூட்டத்தில் தெரிவித்த கோரிக்கைகள்:

              விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் இயக்கப்படும் பயணிகள் ரயிலில் 1200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயணிக்கிறார்கள். அலுவலகங்களில் பணிபுரிவோர் 200-க்கும் மேற்பட்டோர் அன்றாடம் பயணிக்கின்றனர்.

               சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், வகுப்புகள் முடிந்து மாலை நேரத்தில் வீடு திரும்ப ரயில் வசதி இல்லை. எனவே மயிலாடுதுறையில் இருந்து விழுப்பரம் மார்க்கத்தில் செல்லும் ரயில், மாலை 5-15 மணிக்கு சிதம்பரத்துக்கு வரும் வகையிலும், விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில், காலை 8-30 மணிக்கு கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்துக்கு வரும் வகையிலும் புதிய பணிகள் ரயில்களை இயக்க வேண்டும்.

               திருப்பாப்புலியூர் - பெங்களூரு, திருப்பாப்புலியூர் - திருநெல்வேலி இடையே புதிய ரயில்ளை இயக்க வேண்டும். வாரம் இரு முறை இயக்கப்படும் சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரல் ரயிலை, ஏற்கெனவே இருந்ததுபோல், மாலை 6 மணிக்கு திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் வரும் வகையில், தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.

               மயிலாடுதுறை - விழுப்புரம் மார்க்கத்தில் உள்ள ரயில் நிலையங்களில், ஓய்வறை வசதி, குடிநீர் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் சிவகுமார் கோரிக்கை விடுத்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior