நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவிலில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. 300 ஆண்டுகளுக்கு பிறகு தைப்பூச விழா, அன்னதானம் நிகழ்ச்சியும், நெல்லிக்குப்பம் கிளை அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில் நடைபெற்றது.
இதை முன்னிட்டு கைலாச நாதர், அகிலாண்டேஸ்வரி, சுப்பிரமணியர், வள்ளி- தெய்வானையுடன் ஆறுமுகம் ஆகிய சாமிகளுக்கு மகா அபிஷேகம் நடந்து சாமிகளுக்கு அலங் காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் வடை-பாயாசத்துடன் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் குப்புசாமி, துளசிதாஸ், பொருளாளர் தனசேகரன், நகரமன்ற உறுப்பினர் தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொண்டர்படை அமைப்பாளர் கமலக்கண்ணன் வரவேற்றார். நகரசபை தலைவர் கெய்க்வாட்பாபு, அன்ன தானம் வழங்கி தொடங்கி வைத்தார். ஊறுகாய் வெங்காய தயிர் பச்சடி, பொறியல், கூட்டு, அப்பளம், மசால்வடை, பாயாசம், கேசரி, சாம்பார் சாதம், வெஜிடேபிள் பிரியாணி, புதினா சாதம் ஆகிய அன்ன தானம் வழங்கப்பட்டது.
மாநில தொண்டர்படை துணை தளபதி புஷ்பநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேசன், நகர இணைச்செயலாளர் வைத்தியநாதன், நாராயண மூர்த்தி, கோவிந்தராஜ், செந்தில்குமார், கண்ணன், முருகன், வேலு, தண்டபாணி, ஞானம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை குருக்கள் பாக்கியராஜ் செய்து இருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக