உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 24, 2011

வடலூர் வள்ளலாரின் சொத்துக்களை ஒருங்கிணைக்க கோரிக்கை

வடலூர்:
 
              வடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தின் சார்பில் 140-வது தைப்பூச ஜோதி தரிசன விழாவை யொட்டி டாக்டர் மகாலிங்கம் கலையரங்கில் சுத்தசன்மார்க்க நிலைய வைரவிழா புதிய கட்டிடம் மற்றும் சிமெண்டு சாலை திறப்பு விழா நடந்தது. தொழில் அதிபர் மகாலிங்கம் தலைமை தாங்கினார்.

           ஓ.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் செல்வராஜ் வரவேற்றார். விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி மாசானமுத்து புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
 
விழாவில் தொழில் அதிபர் டாக்டர் மகாலிங்கம் பேசியது:-

            வள்ளலார் உலகம் வாழ்விக்க வந்த உத்தமர்.அவரின் கொள்கை உலக மக்கள் அனைவரின் பார்வையினை தன் பக்கம் ஈர்த்து உள்ளது. வள்ளலார் நிறுவனங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே நிறுவனமாக்கி முதல்வரின் நேரடி பார்வையில் இயங்கவேண்டும். அதன் மூலம் வள்ளலாரின் தெய்வ நிலைய வளர்ச்சியை கொண்டு வரவேண்டும். வள்ளலார் சொத்துக்கள் பல இடங்களில் பரவி கிடக்கிறது. இதனை பல சமூக விரோதிகள் சட்ட விரோதமாக அனுபவித்து வருகிறார்கள். அதனை கைப்பற்றவேண்டும்.

               சன்மார்கிகள் அனைவரும் வருங்காலத்தில் முதல்-அமைச்சரை சந்தித்து தனித்தனியாக கிடக்கும் சொத்துக்களை ஒருங்கிணைத்து ஒரே நிறுவனமாக இயங்கவேண்டும் என கோரிக்கை வைத்து அதனை முதல்வரின் மேற்பார்வையில் செயல்பட வைக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

              முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், திருவெண்காடு டாக்டர் ராஜமூர்த்தி, டாக்டர் துரை நமச்சிவாயம், குருகுலம் பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகுவரதராசன், விரிவுரையாளர்கள் ஹேமலதா, ரஞ்சிதக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஓ.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் லதா ராஜவெங்கடேசன் தொகுத்து வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தாளாளர் டாக்டர்செல்வராஜ் செய்து இருந்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior