கடலூர் : 
          புதிதாக சேர்ந்த வாக்காளர்களுக்கு,  அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
 
இது  குறித்து கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
             தேர்தல்  ஆணையத்தின் அறிவுரைபடி கடலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு ஜனவரி 1ம் தேதியை  அடிப்படையாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் ஜூலை  1ம் தேதி மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் வெளியிடப்பட்டது. தற்போது புதிதாக  சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி அனைத்து  வட்டங்களிலும் நடந்து வருகிறது. பொது மக்கள் இதனை பயன்படுத்தி வாக்காளர்  அடை யாள அட்டையை பெற்று பயனடைய வேண்டும். 
              இது குறித்து மேலும்  விபரங்களுக்கு 04142- 230651, 230652, 230653, 230654, 232811 என்ற  தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக